சரப்ஜீத் சிங் கல்சா (Sarabjeet Singh Khalsa) என்பவர் இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2024 முதல் பரித்கோட் மக்களவைத் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இவரது தாத்தா பாபா சுச்சா சிங்கும் பதிண்டா மக்களவைத் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்தெடுக்கபட்டவார்.[3]
அரசியல் வாழ்க்கை
கல்சா, 2004 மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு 1,13,490 வாக்குகள் பெற்றார். 2007ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பர்னாலா மாவட்டத்தில் உள்ள படவுர் தொகுதியில் போட்டியிட்டு 15,702 வாக்குகள் மட்டுமே பெற்றார். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இவர் மீண்டும் முறையே பதிண்டா மற்றும் பதேகர் சாகிப் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4]
கல்சா, 2024 பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பரித்கோட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7] பதிவான மொத்த வாக்குகளில் 29.38 விழுக்காட்டு வாக்குகளை அதாவது 2,98,062 வாக்குகள் பெற்று பஞ்சாப் முதல்வரின் நெருங்கிய நண்பரான பஞ்சாபி நடிகர் கரம்ஜித் அன்மோலை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[8]