சரவகோட்டா
சரவகோட்டா (Saravakota) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது பாலகொண்டா வருவாய் கோட்டத்தின் சரவகோட்டா மண்டலத்தில் அமைந்துள்ளது.[2] புவியியல்சரவகோட்டா 18.5930090°N 84.0523816°E என்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது.[3] இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 61 மீட்டர் (203 அடி) உயரத்தில் உள்ளது. இது நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். போக்குவரத்துசரவகோட்டா ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளாலும், தனியார் பேருந்துகளாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் ஸ்ரீகாகுளத்திலிருந்து பாதப்பட்டினம் நகரத்திற்குப் பல பேருந்துகளை இயக்குகிறது தேசிய நெடுஞ்சாலை 326அ (இந்தியா) இந்தக் கிராமத்தின் வழியாகச் செல்கிறது. பாதப்பட்டினம், நரசன்னபேட்டா, சால்லவானிபேட்டா, தெக்கலி முதலியன இந்தக் கிராமத்தின் அருகிலுள்ள நகரங்கள் ஆகும். அருகிலுள்ள தொடருந்து நிலையம், பாதப்பட்டினம் தொடருந்து நிலையம், திலாரு தொடருந்து நிலையங்களாகும் . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia