இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்![]() இந்தியாவில் ஓட்டப்படும் அனைத்து தானுந்து ஊர்திகளுக்கும் அடையாளம் காட்டும் வண்ணம் அனுமதி இலக்கத்தகடுகள் (உரிம எண்) வழங்கப்படுகின்றன. இந்த இலக்கத்தகடுகள் இன்றி வாகனம் ஓட்டுதல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆங்கில வழக்காக நம்பர் பிளேட் என்பதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்கள் மாவட்ட அளவில் அந்தந்த மாநிலங்களின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) வழங்குகிறது. இந்த இலக்கத் தகடுகள் வண்டியின் முன்புறத்திலும் பின்புறத்திலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. சி மாநிலங்களில் வாடகை வண்டிகளின் பக்கவாட்டிலும் இந்த எண்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். சட்டப்படி, அனைத்து தகடுகளும் இலத்தீன் எழுத்துகள் மற்றும் அராபிய எண்ணுருக்கள் கொண்டு பொறிக்கப்பட வேண்டும்.[1] இவை இரவில் ஒளியூட்டப்பட வேண்டும் என்பதும் பயன்படுத்தப்படும் எழுத்துரு இன்ன அளவில் இருக்க வேண்டும் என்பதும் கூடுதல் விதிகளாகும். சிக்கிம் போன்ற சில மாநிலங்களில் வெளிமாநில இலக்கத்தகடுகள் கொண்ட ஊர்திகள் சில பகுதிகளுக்குச் செல்வது தடைபடுத்தப்படலாம். வடிவம்![]() ![]() இந்தியாவில் தற்போது ஆறு வகையான அனுமதி இலக்கத் தகடுகள் புழக்கத்தில் உள்ளன. மின்கலத்தில் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி இலக்கத் தகடுகளை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.[2]
தற்போதைய வடிவம்தற்போதைய இலக்கத் தகடுகளின் வடிவமைப்பு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
மாநிலங்கள்அனைத்து இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் தங்களுக்கான ஈரெழுத்துக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இந்த முறை 1980களில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டம்/வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் தங்களுக்கான மூன்றெழுத்துக் குறியீட்டைக் கொண்டிருந்தன. இது மாநிலத்தை அடையாளப் படுத்தாமையினால் குழப்பங்கள் விளைந்தன. இதற்கான தீர்வாகவே மாநிலங்களுக்கான குறியீடும் சேர்க்கப்பட்டது. சில மாநிலங்களில் 1960 களில் நிலவிய (மகாராட்டிரம் - பம்பாய் மாகாணம் - BMC, தமிழ்நாடு - மதராசு மாகாணம் - MDR) இன்றும் செல்லுபடியாகும். புதியதாக உருவாக்கப்பட்ட மாநிலங்களான உத்தராகண்டம், சத்தீசுகர் சார்க்கண்ட் (முறையே உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து பிரிந்தவை), தங்களுக்கான புதிய குறியீடுகளில் இலக்கத்தகடுகள் வழங்குகின்றன. இருப்பினும் முந்தைய மாநிலத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் வழங்கப்பட்ட இலக்கத்தகடுகளும் இங்கு செல்லுபடியாகும். 2007இல் உத்தராஞ்சல் என்றழைக்கப்பட்ட மாநிலம் உத்தராகண்டம் என மறுபெயரிடப்பட்டது. எனவே மாநிலக் குறியீடும் UA இலிருந்து UK ஆக மாறியது. ஈரெழுத்து மாநிலக் குறியீடுகள் பின்வருமாறு:
முன்னாள் குறியீடுகள் பின்வருமாறு:
உயர் பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகள்இந்திய அரசு சூன் 1, 2005 அன்று நடுவண் இயந்திர ஊர்திகள் விதிகள் 1989இன் 50வது விதியை திருத்தி புதிய சோசடி செய்யவியலாத பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகளை (HSRP) கொண்டுவருவதை கட்டாயமாக்கியது. [7][8] அனைத்துப் புதிய, இயந்திரத்தினால் இயங்கும், சாலை ஊர்திகளும் புதிய இலக்கத்தகடுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இயங்கும் ஊர்திகள் இரண்டாண்டுகளுக்குள் தங்கள் இலக்கத்தகடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தது. இந்த உயர் பாதுகாப்பு இலக்கத்தகடுகள் காப்புரிமை பெற்ற குரோமியம் முப்பரிமாண ஒளிப்படம்,[7] சீரொளி எண்ணமைப்பு, எண்-எழுத்து வழி ஊர்தி சோதனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடையாளம், 45 பாகை சரிவில் இந்தியா எனப் பொறிக்கப்பட்ட மீள்-எதிரொளிப்பு சுருள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த எழுத்துருக்கள் தெளிவான காட்சிக்காக பொறிக்கப்பட்டிருக்கும். முப்பரிமாண ஒளிப்படத்தின் கீழே இடது புறத்தில் வெளிர் நீலத்தில் "IND" என்ற எழுத்துக்கள் காணப்படும்.[7] எனினும் இந்த செயல்முறை இன்னமும் செயலாக்கத்திற்கு வரவில்லை; நடைமுறைப்படுத்த வேண்டிய மாநில அரசுகள் இத்தகைய உயர் பாதுகாப்புப் பலகை தயாரிப்பாளர்களை அலுவல் முறையில் நியமிக்காததே காரணமாக கூறப்படுகிறது. [9] மேலும் நியமனம் குறித்த பல வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.[8][9] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நவீன இலக்கத்தகடுகளை அறிமுகப்படுத்தாதற்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக தில்லி, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச போக்குவரத்து செயலர்களை நேரில் தோன்ற அழைத்தது.[10] மேலும் உச்ச நீதிமன்றம் நவம்பர் 30, 2004, அன்று இந்த விதியை அனைத்து மாநிலங்களும் செயற்படுத்த வேண்டும் என விளக்கம் வெளியிட்டது.[10] தற்போது மேகாலயா, சிக்கிம் மற்றும் கோவா மட்டுமே இதனை முழுமையாக செயற்படுத்தி உள்ளன. திரிபுரா, கர்நாடகா, மகாராட்டிரம் மற்றும் கேரளா ஒப்பந்தப் புள்ளிகள் அழைத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கள் எதுவும் எடுக்கவில்லை.[10] இவற்றைத் தவிர மற்ற மாநிலங்கள் எதுவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.[10] புதுச்சேரியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும், பதிவாகும் புதிய வாகனங்களுக்கும் இனி உயர் பாதுகாப்பு இலக்கத் தகடுகள் பொருத்தப்பட இருக்கின்றன.[11] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia