சரவணன் (நடிகர்)
சரவணன் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் 1991 முதல் 1998 வரை முன்னணி நடிகராக இருந்தார். குடும்பம் மற்றும் துவக்ககால வாழ்க்கைசரவணன் சேலத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மொத்தம் ஐந்து குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராவார். இவரது தாய் ஒரு செவிலியராவார். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் சென்னை சென்று அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கல்வி பயின்றர். இவர் 1996 இல் சூரியசாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தொழில்1990 களில் சரவணன் தொடர்ச்சியாக முன்னணி வேடங்களில் நடித்தார், ஆனால் தசாப்தத்தின் பிற்பகுதியில் இவரது திரைப்பட வாழ்க்கை நின்றுபோனது.[3] இவர் தாயுமனவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் . சிறிது காலத்திற்கு பிறகு அமீரின் பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்துத்து, விமர்சன ரீதியான பாராட்டையும் , தமிழில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் . இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதையும் பெற்றார்.[4][5] பருதிவீரனின் வெற்றிக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சஞ்சய் ராமால் எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான வீரமும் ஈரமும் படத்தில் நடிப்பது உள்ளிட்ட பல வாய்ப்புகளைப் பெற்றார்.[6] அண்மையில் இவர் பிக் பாஸ் தமிழ் 3 இல் 6 வது போட்டியாளராக நுழைந்தார். திரைப்பட வரலாறு
தொலைக்காட்சி
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia