சரவாக் கட்சிகள் கூட்டணி அல்லது ஜிபிஎஸ் (ஆங்கிலம்: Sarawak Parties Alliance; மலாய்: Gabungan Parti Sarawak (GPS); சீனம்: 砂拉越政黨聯盟; ஜாவி: ݢابوڠن ڤرتي سراوق) என்பது மலேசியாவின்சரவாக் மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கூட்டணியாகும்.
தற்போது மக்களவையில் 23 இடங்களுடன் நான்காவது பெரிய அரசியல் கூட்டணியாக உள்ளது. மேலும் சரவாக் மாநிலத்தில் இந்தக் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்து உள்ளது.
உருவாக்கம்
சரவாக் கட்சிகள் கூட்டணி 12 ஜூன் 2018-இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள்:
இந்த நான்கு கட்சிகளும் பாரிசான் நேசனல் (பிஎன்) கூட்டணியின் முன்னாள் கூறு கட்சிகளாக இருந்தன. பாரிசான் நேசனல் கூட்டணியில் இருக்கும் தீபகற்ப மலேசியக் கட்சிகளும்; சபா மாநிலக் கட்சிகளும்; ஒருபோதும் சரவாக்கில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாது என்ற ஓர் உடன்படிக்கையுடன் இந்தச் சரவாக் கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டது.[10]
கூட்டணியின் கொள்கைகள்
மலேசியா ஒப்பந்தத்தின் (Malaysia Agreement) அடிப்படையில் மாநில நலன்கள் மற்றும் உரிமைகளில் சரவாக் கட்சிகள் கூட்டணி கவனம் செலுத்தும்; மற்றும் பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) நடுவண் அரசாங்கத்தில் ஒத்துழைக்கத் தயாராக இருந்த போதிலும் எதிர்க் கூட்டணியாகவே இருக்கும் என்பது இந்தக் கூட்டணிக் கொள்கைகளில் ஒன்றாகும்.[7]
2018 ஆகஸ்டு 23-ஆம் தேதி, அதன் தலைவரான அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Zohari Openg), ஜிபிஎஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சங்கங்களின் பதிவாளரின் (Registrar of Societies (RoS) அதிகாரபூர்வக் கடிதத்திற்காகக் காத்து இருப்பதாக அறிவித்தார்.[11] இந்தக் கூட்டணி இறுதியாக 19 நவம்பர் 2018-இல் சட்டப்பூர்வமாக்கப் பட்டது.[4][5]
↑Jeremy Veno (10 January 2019). "A guiding light for GPS". The Borneo Post. Retrieved 23 January 2019. According to Abang Johari, the focal point of the GPS logo depicts the Kenyalang (hornbill) in the shape of an 'S' which reflects the vision and slogan of the party of putting 'Sarawak First'.
↑"GPS will be new platform for Sarawak Government". Bernama. Daily Express. 21 January 2019. Retrieved 23 January 2019. The defeat of the Barisan Nasional (BN) government at the federal level after the general election last year saw BN component parties in the state forming the GPS with its slogan or catchphrase "Utamakan Sarawak" or "Sarawak First".
↑ 5.05.1Samuel Aubrey; Abdul Hakim Bujang; Kim How Pin; Peter Boon (20 November 2018). "ROS officially approves GPS". The Borneo Post. Retrieved 20 November 2018.