சரவாக்
சரவாக் என்பது (மலாய்: Sarawak; ஆங்கிலம்: Sarawak; சீனம்: 三砂拉越); கிழக்கு மலேசியாவில் அமைந்து உள்ள ஒரு மாநிலம். மலேசியாவின் 13 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமாகும். ஏறக்குறைய தீபகற்ப மலேசியாவின் பரப்பளவைக் கொண்டது. இந்த மாநிலத்தின் தலைநகரம் கூச்சிங்.[9] போர்னியோ தீவில் உள்ள இரு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். சபா மற்றொரு மாநிலம் ஆகும். பூமி கென்யாலாங் (Bumi Kenyalang) என அழைக்கப்படும் சரவாக், போர்னியோ தீவில் வட மேற்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரிய மாநிலமான சபா மாநிலம்; போர்னியோ தீவின் வடகிழக்கே அமைந்து உள்ளது. வடக்கே புரூணை; தெற்கே கலிமந்தான் நிலப் பகுதிகள் உள்ளன. சரவாக் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரம் கூச்சிங். அதுவே சரவாக் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம்; மாநிலத்தின் பொருளாதார மையமும் ஆகும். மிரி, சிபு, பிந்துலு ஆகியவை சரவாக்கின் மற்ற பெரிய நகரங்களின் பட்டியலில் சேர்கின்றன. 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் சுமார் 2.45 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம் அல்லாதவர் ஆவர். இங்கு மலாய் மக்கள் அல்லாத 30 பழங்குடி இனக் குழுக்கள் வாழ்கின்றனர்.[6] பொதுசரவாக் மாநிலம், பூமத்திய ரேகை (Equatorial Climate) காலநிலையில் மிகுதியான வெப்பமண்டல மழைக் காடுகளைக் கொண்டது. அத்துடன் ஏராளமான விலங்கு இனங்களையும் மற்றும் தாவர இனங்களையும் கொண்டுள்ளது. முலு மலை தேசிய பூங்கா (Gunung Mulu National Park); மற்றும் பல முக்கிய குகை அமைப்புகளையும் கொண்டுள்ளது. இந்த மாநிலத்தின் மிக உயரமான மலை மூருட் மலை (Mount Murud). மலேசியாவின் மிக நீளமான ஆறு ராஜாங் ஆறு (Rajang River). இந்த ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான பாலுய் ஆற்றில் (Balui River), தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அணைகளில் ஒன்றான பக்குன் அணை (Bakun Dam) கட்டப்பட்டு உள்ளது. மலேசியாவில் சரவாக் மாநிலத்தில் மட்டுமே கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.[10] சாந்துபோங் தொல்பொருள் தளம்சரவாக்கில் உள்ள நியா குகைகளில் (Niah National Park) 40,000 ஆண்டுகளுக்கும் முந்தைய தொடக்கக்கால மனித குடியிருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்குள்ள சாந்துபோங் தொல்பொருள் தளத்தில் (Santubong Archaeological Site) கி.பி 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையிலான சீன மண்பாண்டங்களும் (Chinese Ceramics) கண்டுபிடிக்கப்பட்டன. 16-ஆம் நூற்றாண்டில் புரூணை சுல்தானகம் (1368–1888) (Bruneian Sultanate 1368–1888); எனும் தொடக்கக்கால புரூணை சுல்தானகத்தின் செல்வாக்கின் கீழ் சரவாக்கின் கடலோரப் பகுதிகள் இருந்தன. 1839-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் புரூக் (James Brooke) என்ற பிரித்தானிய ஆய்வாளர் சரவாக்கிற்கு வந்தார். இரண்டாம் உலகப் போர்அவரும்; அவரின் சந்ததியினரும் 1841-ஆம் ஆண்டு தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரை சரவாக் மாநிலத்தை ஆட்சி செய்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, சரவாக் மாநிலம், மூன்று ஆண்டுகள் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, சரவாக்கின் கடைசி வெள்ளை ராஜா (White Rajah), சார்லசு வைனர் புரூக் (Charles Vyner Brooke) என்பவர், சரவாக்கை பிரித்தானியப் பேரரசிடம் ஒப்படைத்தார். 1946-ஆம் ஆண்டில், சரவாக் மாநிலம், பிரித்தானியா பேரரசின் அரச காலனியாக (British Crown Colony) மாறியது. 22 சூலை 1963-இல், பிரித்தானியர்களால் சரவாக் மாநிலத்திற்குச் சுயாட்சி (Self-Government) வழங்கப்பட்டது. பின்னர் 16 செப்டம்பர் 1963-இல் மலேசியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. இருப்பினும், மலேசியா கூட்டமைப்பை இந்தோனேசியா எதிர்த்தது. அதுவே மூன்று ஆண்டு கால இந்தோனேசியா - மலேசியா மோதலுக்கும் வழிவகுத்தது. அதன் தொடர்பாக 1990-ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்டு கிளர்ச்சிகளும் (Communist Insurgency) நீடித்தன. சரவாக் பிரதமர்சரவாக் மாநிலத்தின் ஆளுநர் (Governor); யாங் டி பெர்துவா சரவாக் என்று அழைக்கப் படுகிறார். அதே நேரத்தில் அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர்; சரவாக் பிரதமர் என்று அழைக்கப் படுகிறார். 2022 மார்ச் 1-ஆம் தேதி முதல் சரவாக்கின் முதலமைச்சர் பதவி சரவாக் பிரதமர் (Premier of Sarawak) பதவி என மாற்றம் கண்டுள்ளது.[11] சரவாக் மாநிலத்தை நிர்வாகப் பிரிவுகள் (Administrative Divisions) என்றும் மாவட்டங்கள் (Districts) என்றும் பிரித்து உள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற அமைப்பு (Westminster Parliamentary System) முறைமையைக் கொண்டது. இந்த அமைப்பு முறைமை மலேசியாவின் ஆரம்பகால மாநிலச் சட்டமன்ற அமைப்பைப் போன்றதாகும். மலேசிய அரசியலமைப்பின் (Malaysian Constitution) கீழ், தீபகற்ப மலேசியா மாநிலங்களை விட சரவாக் மாநிலத்திற்கு அதிக சுயாட்சி உள்ளது. இயற்கை வளங்கள்சரவாக் மாநிலத்தின் இயற்கை வளங்கள் காரணமாக, இந்த மாநிலம் எண்ணெய் மற்றும் எரிவாயு, மரம் மற்றும் எண்ணெய் பனை ஏற்றுமதியில் முதன்மை பெற்றுள்ளது. அதே வேளையில் வலுவான உற்பத்தி ஆற்றல் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இந்த மாநிலம் இன ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், மொழி ரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டது. இங்கு இபான் (Iban), மலாய் (Malay), சீனர் (Chinese), மெலனாவ் (Melanau), பிடாயூ (Bidayuh) மற்றும் ஒராங் உலு (Orang Ulu) போன்ற பல முக்கிய இனக் குழுக்கள் உள்ளன. ஆங்கில மொழி மற்றும் மலாய் மொழி ஆகியவை மாநிலத்தின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும். இந்த மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு மதம் இல்லை. வரலாறு![]() 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசியர் வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. 17-ஆம் நூற்றாண்டில் சுல்தான் தெங்கா என்பவரால் ஆளப் பட்டாலும், இன்றைய சரவாக் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டு வந்தது. 1841-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்தார். இவர் வந்த காலத்தில் அங்கு டயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க புருணை சுல்தானின் உதவியை ஜேம்ஸ் புரூக் நாடினார். புருணை சூல்தானுடன் ஜேம்ஸ் புரூக் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டார். ஜேம்ஸ் புரூக்அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841 செப்டம்பர் 24-இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக நியமிக்கப் பட்டார்ர். அதன் பின்னர் ஜேம்ஸ் புரூக் தன்னை சரவாக்கின் ராஜா என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு வெள்ளை ராஜாக்கள் வம்சாவளி உருவாக்கப்பட்டது. 1842, ஆகஸ்ட் 18-ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர், 1868-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் சார்லசு புரூக் 1917-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது மகன் சார்லசு வைனர் புரூக் ஆட்சி செய்தார்[12]. நூறு ஆண்டுகால ஆட்சிபுரூக் வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய குடியேற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். சீன வர்த்தகர்களின் வருகையை புரூக் வம்சாவளியினர் ஊக்குவித்தாலும், அவர்களைப் பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. டயாக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்னியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும். இரண்டாம் உலகப் போர்இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16-இல் மிரி நகரையும், டிசம்பர் 24-இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்னியோ தீவு முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1945-இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்னியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946-இல் அப்போதைய சரவாக் ராஜா தன் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார். அதற்குப் பதிலாக சரவாக் ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அந்தோனி புரூக்ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தோனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து சரவாக் ஆட்சிக்கு உரிமை கோரி வந்தார். உலகப் போரின் முடிவில் சரவாக்கில் இருந்து அந்தோனி புரூக் தப்பியோடினார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது அவர் நாட்டுக்குள் திரும்பிவர அனுமதிக்கப் பட்டார். அதற்கு முன்னர் சரவாக்கில் வாழ்ந்த மலாய் மக்கள் சரவாக்கைப் பிரித்தானியரிடம் ஒப்படைத்ததில் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். 1946-இல் சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் சர் டுங்கன் ஜார்ஜ் ஸ்டீபர்ட் படுகொலை செய்யப்பட்டார். சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22-இல் விடுதலை அடைந்து அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia