சர்க்கி தாத்திரி
சர்க்கி தாத்திரி (Charkhi Dadri), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம், மாநிலத்த் தலைநகரான சண்டிகருக்கு தென்மேற்கே 258 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது[2]. இந்நகரத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 149-B மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் NH 348-B செல்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 19 வார்டுகளும், 11074 வீடுகளும் கொண்ட சர்க்கி தாத்திரி நகரத்தின் மக்கள் தொகை 56,337 ஆகும். அதில் ஆண்கள் 29,953 மற்றும் பெண்கள் 26,384 உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.67 % ஆகும். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6765 (12.01 % ) ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.74 % மற்றும் 0% ஆக உள்ளனர். இந்நகர மக்களில் இந்து சமயத்தினர் 98.31%, இசுலாமியர் 0.64%, சமணர்கள் 0.55% மற்றும் பிறர் கிறித்தவர்கள் மற்றும் பிறர் .0.87%% ஆக உள்ளனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia