சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி
சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி (Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA) இந்தியக் காவல் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு,பயிற்சி வழங்கும் முதன்மை காவல் பயிற்சி நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ளது.[1]இந்த அகாதமி உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. வரலாறுமுதலில் மத்தியக் காவல் பயிற்சிக் கல்லூரி எனும் பெயரில், 15 செப்டம்பர் 1948 அன்று இராஜஸ்தான் மாநிலத்தின் அபு மலையில் துவக்கப்பட்டது. 1967-இல் இதன் பெயரை தேசியக் காவல் அகாதமி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமாராகவும், உள்துறை அமைச்சராகவும் செயல்பட்ட சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, தேசியக் காவல் அகாதமியின் பெயரை 1974-இல் சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1975-இல் இப்பயிற்சி நிலையத்தை அபு மலையிலிருந்து, ஐதராபாத் நகரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.[2] வளாகத்தின் அமைவிடம்சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி, பெங்களூர்- ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இல், ஐதராபாத் நகரத்திற்கு வெளியே எட்டு கிலோ மீட்டர் தொலைவில், 277 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பயிற்சிஇந்தியக் குடியியல் பணித் தேர்வில் இந்தியக் காவல் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களை சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாதமியில் பயிற்சி வழங்குவர். பயிற்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் முதலில் உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுவர்.[3] இந்தியக் காவல் பணி அதிகாரிகள் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவர். குடியரசு தலைவரின் விருதுகள்![]() சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது. மேலும் தேசியக் காவல் அகாதமியின் சாதனைகளையும், தேச சேவைகளையும் பாராட்டி, அகாதமியின் 40-ஆம் ஆண்டு விழாவின் போது, இந்தியக் குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அமைப்புஇந்தியக் காவல் பணியில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் பணியிடத் தகுதி பெற்றவர் தலைமையில் இந்த அகாதமி இயங்குகிறது. அவருக்கு துணையாக இன்ஸ்பெகடர் ஜெனரல் பதவியில் உள்ள இரண்டு இணை இயக்குநர்களும்; துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் உள்ள மூன்று துணை இயக்குநர்களும், இருபது உதவி இயக்குநர்களும் உள்ளனர். காவல் பயிற்சிக்கு உதவியாக ஒரு தடய அறிவியல் ஆராய்ச்சியாளரும், ஒரு நீதித்துறை அதிகாரியும் மற்றும் கணிணி மற்றும் தொலைத்தொர்பு நிபுணர்களும் உள்ளனர். அகாதமியின் இயக்குநர்கள் பட்டியல்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia