சர்மிளா சர்க்கார்
சர்மிளா சர்க்கார் (Sharmila Sarkar; பிறப்பு சனவரி 1,1979) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் உறுப்பினர் ஆவார். .[1] இளமைசர்க்கார் மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வாவினைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1995ஆம் ஆண்டில் அக்ரத்விப் ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் மத்யமிக் தேர்ச்சி பெற்று 1997ஆம் ஆண்டில் கட்வா கல்லூரியில் சேர்ந்தார். இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் முதுநிலை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] தற்போது இவர் டம்டமில் வசித்து வருகிறார், கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார்.[3][4] அரசியல் வாழ்க்கைசர்க்கார் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia