சவரக்கத்தி (திரைப்படம்)
சவரக்கத்தி (Savarakathi) ஜி. ஆர் . ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் தயாரிப்பில், ராம், மிஷ்கின், பூர்ணா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் அரோள் கரோலின் இசையில், கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில், சதீஷ் குமாரின் படத்தொகுப்பில் 9 பிப்ரவரி, 2018 அன்று வெளியாகியுள்ளது.[1] நடிப்புஇசைஇப்படத்தில் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் அரோள் கரோலின் மேற்கொண்டு வருகின்றார். இத்திரைப்படத்தின் பாடல்களை தமிழச்சி தங்கப்பாண்டியன், மிஷ்கின் ஆகியோர் எழுதியுள்ளனர் திரைப்படப்பணிகள்மிஷ்கின் இத்திரைப்படத்தின் பணிகளை 2015இல் தொடங்கினார். முடித்திருத்தும் பணியில் உள்ள தனக்குத்தெரிந்த ஒருவரின் உண்மைக்கதை என்று தெரிவித்துள்ளார்.[2][3] இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜி. ஆர் . ஆதித்யா, மிஷ்கினின் சகோதரர், இவர் பார்த்திபனிடம் பணியாற்றி உள்ளார். இத்திரைப்படத்தில் நடித்துள்ள ராம் முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்தார், பின்னர் நடிக்க ஒப்புக்காண்டார்.[4][5] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia