சவுத்ஹாம்டன் (Southampton), ஐக்கிய இராச்சியத்தின் நான்கு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கில் அமைந்த துறைமுக நகரம் ஆகும்.[6] இது இலண்டன் மாநகரத்திலிருந்து தென்மேற்கில் 15 மைல் தொலைவில் உள்ளது.[7][8] தெற்கு ஆம்ப்சயர் (ஹாம்ப்ஷயர்) நகரத்தின் ஒரு பகுதியாக சவுத்தாம்டன் மற்றும் போர்ட்சுமவுத் (போர்ட்ஸ்மவுத்) நகரங்கள் உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைக்கு சவுத்தாம்டன் நகரத்தைச் சேர்ந்த இரிசி சுனக்கு எனும் இந்திய வம்சாவழியினர், 2015 முதல் ரிச்மாண்ட் (யோர்க்) தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டு கருவூல செயலாளராக(அமைச்சர்) இருந்து அக்டோபர் 25, 2022 முதல் பிரதமராக பதவியிலுள்ளார்.
மக்கள் தொகை பரம்பல்
2020-ஆம் ஆண்டின் கணக்கின்படி, 1,07,695 குடியிருப்புகள் கொண்ட சவுத்தாம்டன் நகரத்தின் மக்கள் தொகை 2,60,111 ஆகும். அதில் ஆண்கள் 1,27,610 (49.1%) மற்றும் பெண்கள் 1,32,501 (50.9%) ஆகும். இதன் மக்கள் தொகையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17,470 (6.7%) ஆகவுள்ளனர். சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் 43,000 மாண்வ மாணவியர் கல்வி பயில்கின்றனர[9] இதன் மக்கள் தொகையில் வெள்ளையர்கள் 85.9%, ஆசிய நாட்டவர் 8.4%, கருப்பினத்தவர் 2.2% மற்றும் கலப்பினத்தவர்கள் 1.2% ஆகவுள்ளனர்.
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், சவுத்தாம்டன் உயரம்: 19 m (62 அடி), சாதாரணமானது: 1981–2010, அதிகபட்சம் 1853–தற்போது வரை
↑"British urban pattern: population data"(PDF). ESPON project 1.4.3 Study on Urban Functions. European Union – European Spatial Planning Observation Network. March 2007. pp. 120–121. Archived from the original(PDF) on 24 September 2015. Retrieved 14 May 2011.