சவுத்ரி முகமது அக்ரம்
சவுத்ரி முகமது அக்ரம் (Choudhary Mohammad Akram; பிறப்பு 1962) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2014 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2024 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] இளமைஅக்ரம் சம்மு காசுமீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள லசானா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மறைந்த அசலம் சவுத்ரி முகமது அசலமின் மகன் ஆவார். 1991ஆம் ஆண்டில் சிறிநகரில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் குடிமைப் பொறியியல் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.[3] அரசியல்அக்ரம் 2014 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் சுரன்கோட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 30,584 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முசுதக் அகமது சாவினைத் 8,064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5][6] 2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக 34,201 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் முகமது சாநவாசை 8,551 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia