சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி (Saudi Arabia national football team, அரபி: منتخب السعودية لكرة القدم) பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் சவூதி அரேபியாவை சார்புப்படுத்துகின்றது. இந்த அணி அல்-சுக்கோர் (வல்லூறுகள்) எனவும் அல்-கோதோர் (பச்சைகள்) எனவும் இரசிகர்களால் அழைக்கப்படுகின்றது. ஆசியாவின் மிகவும் வெற்றிகரமான தேசிய அணியாகக் கருதப்படும் சவூதி அரேபியா ஆசியக் கோப்பையை மூன்று முறை (1984, 1988, 1996) வென்றுள்ளது; 1994இல் விளையாடத் தொடங்கிய பிறகு, உலகக்கோப்பை இறுதியாட்டங்களுக்கு அடுத்தடுத்து நான்கு முறை தகுதி பெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு தான் பங்கேற்ற முதல் உலகக்கோப்பையில் குழுநிலை ஆட்டங்களில் தரவரிசையில் முன்நின்ற பெல்ஜியம், மொரோக்கோ அணிகளை அதிர்ச்சித் தோல்வியடைய வைத்தது; பதினாறு அணிகளின் சுற்றுக்கு முன்னேறி அங்கு சுவீடனிடம் வீழ்ந்தது. அடுத்த மூன்று உலகக்கோப்பைகளில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. மேற்சான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia