பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய கால்பந்து அணி (Belgium national football team, டச்சு: Het Belgisch voetbalelftal; French: L'équipe de Belgique de football; German: Die Belgische Fußballnationalmannschaft) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பெல்ஜியம் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். 1904ஆம் ஆண்டில் எவென்சு கொப்பெ கோப்பைப் போட்டிகளிலிருந்து இந்த அணி ஆடி வருகிறது. இதனை பெல்ஜியத்தில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தி வரும் பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் மேற்பார்த்து வருகின்றது. 1895இல் நிறுவப்பட்ட பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் பழமையானதொரு கால்பந்துச் சங்கமாகும். இந்த அணியின் தன்னக விளையாட்டரங்கமாக பிரசெல்சு நகரில் உள்ள மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம் விளங்குகிறது. தேசிய அணியின் மேலாளராக மார்க் வில்மோட்சு உள்ளார். இந்த அணியினரை சிவப்புப் பேய்கள் (டச்சு: Rode Duivels ; French: Diables Rouges; German: Rote Teufel) எனக் குறிப்பிடுகின்றனர். பன்னாட்டுப் போட்டிகளில் பெல்ஜியம் அணியின் சிறந்த சாதனையாக உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் விளையாட ஆறுமுறை, 1982 - 2002, தகுதி பெற்றதும் 1986 உலகக்கோப்பையில் நான்காமிடத்தை எட்டியதும் ஆகும். மேலும் 1980ஆம் ஆண்டு யூரோ கோப்பையில் இரண்டாவதாகவும் 1920ம் ஆண்டு ஒலிம்பிக்சில் சொந்த மண்ணில் தங்கப் பதக்கம் வென்றதும் ஆகும். மற்றக் குறிப்பிடத்தக்க வெற்றிகளாக உலக்க் கோப்பை வாகையர்களை நான்கு முறை வீழ்த்தியதைக் குறிப்பிடலாம்: 1954இல் 2–0 என்ற கணக்கில் மேற்கு செருமனியையும், 1963இல் 5–1 என்ற கணக்கில் பிரேசிலையும் , 1982இல் 1–0 என்ற கணக்கில் அர்கெந்தீனாவையும் 2002இல் 2–1 என்ற கணக்கில் பிரான்சையும் வீழ்த்தி உள்ளனர்.[7] மேற்சான்றுகள்
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia