சாக்லேட் (திரைப்படம்)
சாக்லெட் (Chocklet) என்ற 2001 தமிழ் படம் பிரசாந்த், ஜெயா ரே ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சுஹாசினி, மும்தாஜ், ஆர்.மாதேஷ் மற்றும் நாகேந்திர பிரசாந்த் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் உடன் நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஏ. வெங்கடேஷ் இதனை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தேவா அவர்களால் இசையமைக்கப்பட்டு வெற்றிகரமான திரைப்படமாக ஓடியது.[1] கதைச்சுருக்கம்அரவிந்த் (பிரசாந்த்) அஞ்சலியைப் (ஜெயா ரே) பற்றிய பின்னணி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான். சோதனை முறையில் ஒரு வாரம் இருவரும் காதலிக்கலாமெனவும், இது நீண்ட காலத்திற்கு காதல் நிலைத்திருக்க இருவருக்குமே வழிவகுக்கும் என அஞ்சலி அரவிந்திடம் கூறுகிறாள். இதற்கு அரவிந்தனும் ஒப்புக்கொள்கிறான். அஞ்சலி காவல்துறை ஆணையாளர் ஜெயச்சந்திரன் (லிவிங்ஸ்டன்) மற்றும் சாரதா (சுஹாசினி) ஆகியோரின் மகளாவார். அரவிந்தன் இவர்கள் இருவரிடமும் அஞ்சலியின் பெற்றோர் எனத்தெரியாமலே ஒரு சுமூகமான உறவை பராமரிக்கிறார். அரவிந்த் ஒரு நல்ல பையனாக இருப்பதால் இச்சோதனைக் காதலை விட்டுவிட்டு அவனை திருமணம் செய்துகொள்ள அஞ்சலியின் தந்தை ஜெயச்சந்திரன் அவளிடம் வற்புறுத்துகிறார். அரவிந்த் அஞ்சலியின் தாயார் சாரதாவை சமாதானப்படுத்தி தனது சார்பாக கோருகிறார். சாரதவும் அரவிந்த், அஞ்சலியின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். நடிப்பு
தயாரிப்பு2001 சனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சென்னை மாயாஜாலில் படமாக்கப்பட்டது.[2] இப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் முன்னோட்ட பட வெளியீட்டு நிகழ்ச்சியில், இதன் தயாரிப்பாளர் ஆர். மகேஷ் இத்திரைப்படத்தின் கதநாயகன் நடிகர் பிரசாந்தின் எடைக்குச் சமமான எழுபத்தைந்து கிலோ சாக்லேட்டினை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கினார். ரீமா சென் மற்றும் ரிச்சா பலோட் என்ற நடிகை படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தனர். ஆனால் தயாரிப்பாளருக்கும் அவர்களுக்குமான சம்பளப் பிரச்சினை காரணமாக அவகள் இப்படத்திலிருந்து விலகி கொண்டனர். பின்னர் முன்னாள் மிஸ் கோவா போட்டியில் வென்ற ஜெயா ரே என்பவர் நடித்து இத்திரைப்படம் வெளிவந்தது.[3] இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சி சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தை சாலையில் 16 படபிடிப்புக் கருவிகளுடன் படமாக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் ஒரு பாடல் காட்சி யப்பான் , கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களில் ஒரு கப்பலில் படமாக்கப்பட்டது.[4] வெளியீடுசான் பிரான்சிஸ்கோவின் ஒரு கடல் பகுதியில் இப்படத்தின் முதல் காட்சி செப்டம்பர் 2001 வெளியிடப்பட்டது. இதன் பிறகு இந்தத் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிஃபி.காம் என்ற வலைதளத்தில் ஒரு விமர்சகர் பிரசாந்தைப் பற்றி நேர்மறையான விமர்சித்திருந்தார்.[5] இப்படத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சோதனைக்குள்ளாக்குகிறார்கள், இதற்கு திரைக்கதையைத்தான் குற்றம் சொல்லவேண்டுமென மாலதி ரங்கராஜன் என்பார் தி இந்து நாளிதழில் எழுதினார்.[6] ரெடிப்.காம் இதற்கிடையில் இப்படத்தைப்பற்றி ஒரு எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியது, " படத்தின் உரையாடல்கள், வியக்கத்தக்க, மற்றும் நம்பமுடியாத முடிவை நோக்கி அமைந்திருக்கிறது. மேலும் சுஹாசினி போன்ற திறமையான நடிகைக்கு அவரது திரைப்பட வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான தோற்றங்களில் ஒன்றாக இக்கதாபாத்திரம் அமைந்தது என எழுதுகிறது. "[7] சினிசவுத்.காமில் ஒரு விமர்சகர் "இந்தத் திரைப்படம் இளைஞர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ளது, மேலும் இப்படம் சில வியக்கத்தக்க காட்சிகளைக் கொண்டுள்ளது. எனக் குறிப்பிடுகிறார்."[8] 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தத் திரைப்படம் தெலுங்கில் இதே பெயரில் வெளியிடப்பட்ட போதும் விமர்சகர்களிடமிருந்து சில நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது.[9] இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் மற்றும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து 2005 ஆம் ஆண்டில் "பெட்ரோல்" என்ற திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.[10]< ஆனால் பிரசாந்தின் திருமண பிரச்சினைகள் காரணமாகவும், இயக்குனரின் கால அட்டவணையின் தாமதத்தாலும் இறுதியில் அந்த படம் முடிக்கப்படவில்லை..[11] இசைஇசையமைப்பாளர் தேவா இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதி இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற "மலை,மலை" என்ற பாடல் திரைப்பட வெளியீட்டின் போது பல இளைஞர்களுக்கான தேசிய கீதமாகவே இருந்தது. மேலும் இதன் தயாரிப்பாளர் ஆர். மகேஷ் ஒரு பாரம்பரிய இசைவெளியீட்டு விழாவைத் தவிர்த்து, காட்பரி சாக்லேட் உடன் இணைக்கப்பட்ட ஒலிப்பேழையினை கடைகளுக்கு விநியோகிக்கத்தார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia