மும்தாஜ் (நடிகை)
மும்தாஜ் (பிறப்பு:5 சூலை 1980) தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.[1][2] டி. ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா (1999) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலமாகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் குஷி (2000), லூட்டி (2001), சாக்லேட் (2001) உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார். 2018 இல், பிக் பாஸ் தமிழ் 2 இல் தோன்றிய பிறகு (இவரது கடைசி ஊடக தோற்றத்தைக் குறித்தது) இவர் திரையுலகில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தொழிற்துறைக்கு திரும்புவதில் ஆர்வமும் இல்லை.[3] மோனிஷா என் மோனாலிசா (1999) குஷி (2000) சாக்லேட் (2001) ஜெமினி (2002) செல்லமே (2004) இலன்டன் (2005) வீரசாமி (2007), ராஜாதி ராஜா (2009) போன்ற பல படங்களில் தோன்றியதற்காக 2000 களில் இந்திய திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாக மும்தாஜ் அறியப்பட்டார்.[4] ஆரம்பகால வாழ்க்கைமும்தாஜ் தனது பள்ளிப்படிப்பை மும்பை பந்த்ராவில் உள்ள மவுண்ட் மேரிஸ் பள்ளியில் முடித்தார். ஒரு இளம் தீவிர திரைப்பட இரசிகையாக, தனது அறையில் ஸ்ரீதேவி இடம்பெறும் சுவரொட்டிகள் நிறைந்திருப்பதாகவும், பள்ளி பேருந்தில் பிலிம்பிஸ்தான் சுடுடியோவைக் கடக்கும்போது, கலைஞர்களைப் பார்ப்பதற்காக இவர் வெளியே எட்டிப் பார்த்துச் செல்வதாகவும் வெளிப்படுத்தினார்.[2][5][6] திரைப்படப் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia