சாந்தனு தாக்கூர்
சாந்தனு தாக்கூர் (Shantanu Thakur)(பிறப்பு 1982) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு முதல் பாங்கான் மக்களவை உறுப்பினராக உள்ளார்.[3][4][5] தாக்கூர் 7 சூலை 2021 அன்று மோதியின் அமைச்சரவை மறுசீரமைப்பிற்குப் பிறகு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அரசியல் வாழ்க்கை2019 பொதுத் தேர்தலில், தாக்கூர் பாஜகவின் வேட்பாளராக, பாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இத்தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பாஜக உறுப்பினர் இவராவார். இவர் வங்காள முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்கூரின் மகன் ஆவார். இவர் அனைத்திந்திய மாத்துவ மகாசங்கத்தின் தலைவர் ஆவார்.[7][8][9][10] மாநில அமைச்சர்சூலை 7, 2021 அன்று நரேந்திர மோதியின் இரண்டாவது அமைச்சரவையின், அமைச்சரவை மாற்றத்தின் போது, இவருக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia