சர்பானந்த சோனாவால்
சர்பானந்த சோனாவால் (Sarbananda Sonowal) (பிறப்பு: 31 அக்டோபர் 1961) இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக இருந்தார்.[2] சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[3][4] இவர் தற்போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அமைச்சராக உள்ளார்.[5] [6] வரலாறுமேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர்.[7] நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும், தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.[8][9] 2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.[10] மே 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் மே 2016-இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia