சாமி வெங்கடாசலம் செட்டி

1920களில் சாமி வெங்கடாசலம் செட்டியார்

சாமி வெங்கடாசலம் செட்டி (Sami Venkatachalam Chetty, இறப்பு: 17 நவம்பர் 1958): இவா் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், இம்பீரியல் சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

வாழ்க்கை

1920 களின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1926 தேர்தல்களில் சென்னை சட்ட பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சைமன் குழு வருகையின் போது சுயராஜ் கட்சியின் தலைவராக அவர் பணியாற்றினார். 1925-26 இல் செட்டி சென்னை மாநகராட்சி தலைவராகவம் பணியாற்றினார்.

1934 ஆம் ஆண்டில், இந்திய இம்பீரியல் சட்டமன்ற கவுன்சில் தேர்தலில் ஆர்.கே.சண்முகம் செட்டியை தோற்கடித்தார். அவர் 1930 இல் பிற்பகுதியில் அரசியலில் இருந்து விலகுவதற்கு அறிவிப்பதற்கு முன்பு சட்டசபை உறுப்பினராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. Role of Press and Indian Freedom Struggle: All Through the Gandhian Era. APH Publishing. 1981. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176482560, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176482561.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya