சாமுவேல் எல். ஜாக்சன்
சாம்யுவெல் லிராய் ஜாக்சன் (ஆங்கிலம்: Samuel Leroy Jackson) (பிறப்பு டிசம்பர் 21, 1948) என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பல தலைமுறைகளின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், மற்றும் இவர் தோன்றிய திரைப்படங்கள் உலகளவில் $27 பில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளன, மேலும் இவர் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவர் ஆவார்.[1] 1990 களிருந்து குட்பெலாஸ் (1990), ஜங்கிள் பீவர் (1991), பேட்ரியாட் கேம்ஸ் (1992), அமோஸ் & ஆண்ட்ரூ (1993), ஜுராசிக் பார்க் (1993), ட்ரூ ரொமான்ஸ் (1993), ஸ்டார் வார்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். 1994ஆம் ஆண்டு பல்ப் ஃபிக்சன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவர் இன்று வரைக்கும் 150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் 2 (2010), தோர் (2011), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற படங்களில் நிக் ப்யூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜாக்சன் நடித்த திரைப்படங்கள் 7.1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து மிக உயர்ந்த அனைத்து நேர வசூல் வேட்டை நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்தார்.[2] ஆரம்ப கால வாழ்க்கைஜாக்சன் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு வாசிங்டன், டி. சி.[3] இல் எலிசபெத் ஹாரியட் மற்றும் ராய் ஹென்றி ஜாக்சன் ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார்.[4][5] இவரது தந்தை குடும்பத்திலிருந்து விலகி கேன்சஸ் நகரில் வாழ்ந்தார். பின்னர் குடிப்பழக்கத்தால் இறந்தார். ஜாக்சன் தனது வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே தனது தந்தையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்சன் தனது குழந்தை பருவம் முதல் அவரது தாயார் மற்றும் அவரது தாய்வழி தாத்தா பாட்டி குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார்.[6] இவரது மரபனு சோதனையின் படி இவர் பெங்கா மக்களிடமிருந்த் மரபணுவை ஒத்ததாக இருந்தது. இதன் காரணமாக இவர் 2019 இல் காபோனின் இயற்கையான குடிமகனாக அந்தஸ்தை பெற்றார்.[7][8] ஜாக்சன் பல இனவா பள்ளிகளில் கல்வி பயின்றார்[9] மற்றும் சட்டனூகாவில் உள்ள ரிவர்சைடு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia