கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இத் திரைப்படத்தை ஜோ ஜான்ஸ்டன் என்பவர் இயக்க, திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், கிறிஸ் எவன்ஸ், டாமி லீ ஜோன்ஸ், ஹ்யூகோ வீவிங், ஹேலி அட்வெல், ஸ்டான்லி துச்சி, செபாஸ்டியன் இஸ்டான், டெரெக் லூக்கா, நீல் மெக்டோனோ மற்றும் டோமினிக் கூப்பர் ஆகியோர் நடித்தள்ளனர். இது இரண்டாம் உலகப் போரின்போது ஸ்டீவ் ரோஜர்ஸ் ஒரு பலவீனமான மனிதர், சூப்பர் சிப்பாய் கேப்டன் அமெரிக்காவாக மாற்றப்படுகிறார், மேலும் டெஸராண்ட் மூலம் உலக ஆதிக்கத்தை தனக்கு கீழ் கொண்டுவர முயற்சிக்கும் ரெட் ஸ்குள் என்ற தீயவனிடமிருந்து எப்படி உலகை காப்பாற்றினார் என்பதுதான் கதை
நிகழ்காலத்தில் ஆர்டிக் பனிக்கட்டி பகுதிகளில் இருந்து ஸ்டீவ் ரோஜர்ஸ் மீட்கப்படுகிறார். கடந்த காலத்தில் ஜோகன் என்ற ஜெர்மனிய அதிகாரி 1942 ல் டெசராகட் என்ற அதிசக்திவாய்ந்த பொருளை ஜெர்மனிய நார்வே பகுதியில் கைப்பற்றுகிறார். ஸ்டீவ் ரேஜர்ஸ் மெலிந்த சாதாரணமான மனிதராக இருந்தாலும் இராணுவத்தில் பணிபுரிய முயற்சி செய்கிறார். நிறைய முயற்சிகளை கடந்து ஆபிரகாம் என்ற மருத்துவர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஆபிரகாம் அவருடைய சோதனையின் மூலமாக சிறப்பான வலிமைவாய்ந்த மனிதரை உருவாக்கும் சோதனைக்கு ஸ்டீவ் ரோஜர்ஸை அவருடைய நல்ல மனதுக்காக தேர்ந்தெடுக்கிறார். இந்த சோதனை வெற்றியடைந்தாலும் ஹைட்ரா என்ற மோசமான அமைப்பின் சோதனையை தடுக்கும் முயற்சியில் அவருடைய வாழ்க்கையின் முடிவை சந்திக்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் வலிமைமிக்க மனிதராக மாறினாலும் அவருடைய லட்சியத்தின்படி இராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படாமல் கேப்டன் அமேரிக்கா என்ற கற்பனை கதாநாயக பாத்திரத்தை நடிக்கவே அனுமதிக்கப்படுகிறார்
இத்தாலியில் யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் அவருடைய நண்பர் பார்னெஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு சிறைப்பகுதிகளில் இருந்து வெளியேற உதவுகிறார். அவருடைய பழைய அடையாள பெயருடனும் புதிய கவசத்துடனும் கேப்டன் அமேரிக்கா என்ற நிஜவாழ்க்கை கதாநாயகராக மாறுகிறார். ஜோகன் ரெட் ஸ்கல் என்ற பெயருடன் தலைவராக பணிபுரியும் மோசமான ஹைட்ரா அமைப்பின் பகுதிகளை இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கிறார். கடைசியாக ஜோகனின் முயற்சியை தடுக்க விமானத்தில் பயணிக்கும்போது ஸ்டீவ் ரோஜர்ஸுடனான மோதலில் டெசராக்ட்-ன் சக்தி வெளிப்பாட்டால் ஜோகன் மறைந்து போகிறார். அந்த விமானத்தினால் உருவாகப்போகும் சேதத்தை தவிர்க்க ஆர்டிக் பகுதியில் மோதுகிறார்.
நெடுங்கால உறக்க நிலையை கடந்து நிகழ்காலத்தில் நினைவு திரும்பும் ஸ்டீவ் ரோஜர்ஸை சந்திக்கும் பாதுகாப்பு அமைப்பை சார்ந்த நிக் ப்யூரி கடந்த 70 ஆண்டுகளாக ஸ்டீவ் ரோஜர்ஸ் உறக்க நிலையில் இருந்ததை சொல்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் நிலைமையை புரிந்துகொள்கிறார்.
↑Yamato, Jen (April 30, 2012). "Marvel's Kevin Feige on Avengers, Iron Man 3, Thor 2, Universe-Building, and Elektra". MovieLine. Retrieved May 3, 2012. But as we were working on them we started to keep track of some things that the writers and filmmakers of one movie were doing anyway and we started to track them and realized that we could utilize those later down the line. That's how the Cosmic Cube came about; what started as a little seed would grow and grow and grow to The Avengers.