சாமுவேல் பால்ராஜ்

சாமுவேல் பால்ராஜ் (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்தலகுறிச்சியில் பிறந்தவர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கழிவுச் சுழற்சித் துறையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ள இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் முனைவர் வெ. சுந்தரராஜ் என்பவருடன் சேர்ந்து எழுதிய “ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya