சாரெகொப்பா பங்காரப்பா
சாரெகொப்பா பங்காரப்பா (Sarekoppa Bangarappa, 26 அக்டோபர் 1932 – 26 திசம்பர் 2011) ஓர் இந்திய அரசியல்வாதியும் 1990-92 ஆண்டுகளில் கருநாடக முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். 14வது மக்களவையில் சிவமோகா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்பட்ட வகுப்பினரின் தலைவராக விளங்கிய பங்காரப்பா துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியிலும் இறுதியில் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியிலும் பங்காற்றியவர்.[1][2][3] இவர் கருநாடக விகாஸ் கட்சியையும் கருநாடக காங்கிரசு கட்சியையும் நிறுவியவர். அக்டோபர் 26 , 1932ஆம் ஆண்டு கருநாடகத்தில் சிமோகா மாவட்டத்தில் குபாத்தூர் சிற்றூரில் காளியப்பா, காளியம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சனவரி 1,1958இல் சகுந்தலாவை மனைவியாக கைபிடித்தார். குமார் பங்காரப்பா, மது பங்காரப்பா என்ற இரு மகன்களும் மூன்று மகள்களும் இவர்களுக்கு உள்ளனர். கலை மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மேலும் சமூக அறிவியலில் பட்டயப் படிப்பும் முடித்தவர். சிமோகா மாவட்டத்தில் மக்களின் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தார். திசம்பர் 26, 2011 அன்று பெங்களூரில் மல்லய்யா மருத்துவமனையில் சிறுநீரகச் செயலிழப்பினால் மரணமடைந்தார். [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia