சார்கிராம்சார்கிராம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சார்கிராம் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1] இப்பகுதி காடுகள், பழங்கால கோயில்கள் மற்றும் அரச அரண்மனைகளுக்கு பெயர் பெற்ற பிரபலமான சுற்றுலாத் தலமாகும். புவியியல்சார்கிராம் 22.45 ° வடக்கு 86.98 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 81 மீட்டர் (265 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. வங்காளத்தின் பெரும்பகுதியைப் போலவே வானிலை மிகவும் ஈரப்பதமாக, வெப்பமண்டல காலநிலையைக் கொண்டதாக இருக்கின்றது. மே, சூன் போன்ற வெப்பமான மற்றும் வறண்ட மாதங்களில் வெப்பநிலை 46 °C வரை உயரக்கூடும். ஆனால் திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் வெப்பநிலை 4 °C வரை வீழ்ச்சியடையும். மக்கள் வகைப்பாடு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி சார்கிராமின் மக்கட் தொகை 53,158 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் காணப்படுகின்றனர். சார்கிராம் மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 76% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 82% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 71% வீதமாகவும் காணப்படுகின்றது. சார்கிராம், மக்கள் தொகையில் 11% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்.[3] பொருளாதாரம்இந்த பகுதியின் முக்கிய பொருளாதாரம் வணிகம் மற்றும் சாகுபடி என்பனவாகும். சிலர அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் அல்லது பிற தனியார் துறைகளில் பணிபுரிபவர்களும் உள்ளனர். பெரும்பாலான மக்கள் மத்திம வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். [சான்று தேவை] கலாச்சாரம்சார்கிராம் பழங்குடி நடனங்களின் கருவூலம் ஆகும். இந்தப் பகுதியின் பழங்குடி நடனங்கள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. சுவாங், சாங், சவு, டாங்க்ரே, ஜுமூர், பாண்டா, ரன்பா, சஹருல், துசு மற்றும் பாடு என்பன அவற்றில் சிலவாகும். பழங்குடி கலாச்சாரத்தைத் தவிர, வழக்கமான பெங்காலி பண்டிகைகளான துர்கா பூஜை , சரஸ்வதி பூஜை , தீபாவளி , காளி பூஜைகள் ஆகியவை சிறப்பாக நடைப் பெறுகின்றன. ஷிதாலா , ஜகதத்ரி, ஹோலி , ரத யாத்திரை , ஜன்மாஷ்டமி , பீமா பூஜை போன்ற பிற பொதுவான பூஜைகளும் நடைபெறுகின்றன. ஜார்கிராமில் ஏராளமான கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஜார்கிராமில் புகழ்பெற்ற கண்காட்சிகளில் சில பின்வருமாறு: ஜங்கிள் மஹால் உட்சவ், ஜர்கிராம் மேளா, யுவா உட்சவ், ரோங் மாத்தி மனுஷ், ஷ்ரபானி மேளா, பைஷாக்கி மேளா, மிலன் மேளா போக்குவரத்துஅருகிலுள்ள விமான நிலையம் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் ரயில் வழியாக 155 கி.மீற்றரிலும் தொலைவிலும், சாலை வழியாக (என்.எச்-6) 169 கி. மீற்றர் தொலைவிலும் உள்ளது. ஜாம்ஷெட்பூரின் சோனாரி விமான நிலையம் ரயிலில் 96 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையம் 233 கி.மீ தூரத்திலும் (சாலை வழியாக- என்.எச் -33) 258 கி.மீ தொலைவிலும் (ரயிலில்) அமைந்துள்ளது. ரயில்சார்கிராம் பிராந்தியத்தின் பெரிய நகரங்களுடன் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் பாதையான ஹவுரா-நாக்பூர்-மும்பை பாதையின் கரக்பூர்-டாடாநகர் பிரிவில் சார்கிராம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சார்கிராம் ரயில் நிலையம் தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் வருகிறது. கொல்கத்தா / ஹவுரா (155 கி.மீ), மிட்னாபூர் (52 கி.மீ), காரக்பூர் (39 கி.மீ), அசன்சோல் , டடானகர் (96 கி.மீ), ராஞ்சி , தன்பாத் , ரூர்கேலா , ஜார்சுகுடா , புவனேஸ்வர் , கட்டாக் போன்ற நகரங்களுடனும், அருகிலுள்ள பெரிய நகரங்களான பூரி, பிலாய், தில்லி, மற்றும் மும்பை போன்ற பெரிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia