மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதிகளைப் பிரித்து, 4 ஏப்ரல் 2017 அன்று, மேற்கு வங்காளத்தின் 23வது மாவட்டமாக ஜார்கிராம் மாவட்டம் நிறுவப்பட்டது.[2] இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஜார்கிராம் ஆகும்.
3,037.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜார்கிராம் மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 11,36,548 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 96.52% மக்கள் கிராமப்புறங்களிலும், 3.48% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
ஜார்கிராம் உட்கோட்டத்தை மட்டுமே கொண்ட ஜார்கிராம் மாவட்டத்தில் ஜார்கிராம் நகராட்சி, பின்பூர்;I, பின்பூர்;II, ஜாம்போனி, ஜார்கிராம், கோபிவல்லபபூர்;I, கோபிவல்லபபூர்;II, நயாகிராம் மற்றும் சங்க்ரயில் என 8 ஊராட்சி ஒன்றியங்களும்[5] 2513 கிராமங்களும், 79 கிராமப் பஞ்சாயத்துகளும் கொண்டது. இம்மாவட்டத்தின் ஒரே நகரமான ஜார்கிராம், ஒரு நகராட்சியாகும்.[5][6]
ஆசியான் நெடுஞ்சாலை எண் 46 ஜார்கிராம் நகரத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 6 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 9 மற்றும் 5, ஜார்கிராம் நகரத்துடன் மிட்னாப்பூர், கரக்பூர், துர்க்காப்பூர், ஆசான்சோல், பாங்குரா, புருலியா, ஹால்டியா, கொல்கத்தா, ஹவுரா நகரங்களை இணைக்கிறது.
மழை பொழிவு
தென்மேறு பருவ மழைக் காலமான சூலை முதல் செப்படம்பர் மாதங்களில் நன்கு மழை பொழிகிறது. ஜார்கிராம் மாவட்டத்தின் ஆண்டு சராசாரி மழைப் பொழிவு 1400 மில்லி மீட்டராகும்.
↑"District Human Development Report: Paschim Medinipur"(PDF). page 4 (About Paschim Medinipur), page 26 (Predominant Soil), pages 265- 268 (Identification of Flood prone areas, Names of drought prone blocks). Development and Planning Department, Government of West Bengal, 2011. Archived from the original(PDF) on 29 March 2017. Retrieved 2 January 2017.