குன் காவோ அகண்ட அலைவரிசையின் தந்தை என்று அறியப்படுகிறார்.[7]கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை [6][8][9][10][11] மற்றும் கண்ணாடி இழை தகவல் தொடர்பின் தந்தை [12][13] என்றும் அழைக்கப்படுகிறார். குன் கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.[14]
ஆரம்ப வாழ்க்கை
சார்லஸ் குன் கோ 1933 ஆம் ஆண்டு சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார் மற்றும் அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச பள்ளியில் ஆங்கிலம் மற்றும் பிரன்சும் படித்தார்.[15]
கோவின் குடும்பம் 1948 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு குடி பெயர்ந்தது.[16] அங்கு 1952 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்விப் படிப்பும் மற்றும் வூல்விச் பாலிடெக்னிக் கல்லூரியில் [17] (தற்போது கீரின்விச் பல்கலைகழகம்) மின்சார பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் (BSc) பெற்றார்.
1965 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக லண்டன் பல்கலைகழக கல்லூரியில் ஹரால்டு பார்லோ வழிகாட்டுதலில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார்.[18]
↑ 6.06.1Erickson, Jim; Chung, Yulanda (December 10, 1999). "Charles K. Kao". Asiaweek. Archived from the original on ஜூலை 21, 2002. Retrieved December 24, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)