சிசிலியன் தற்காப்பு
சிசிலியன் தற்காப்பு என்பது சதுரங்கத் திறப்புக்களில் ஒன்றாகும். 1. e4 c5 எனத்தொடங்கும் ஆட்டம் சிசிலியன் தற்காப்பாகும் சிசிலியனானது வெள்ளையின் முதல் நகர்த்தலான 1.e4 இற்கு எதிரான பிரபலமான மற்றும் நல்ல முடிவுகளைத்தரக்கூடிய ஒரு தற்காப்பாகும். புள்ளிவிபர அடிப்படையில் அதிக வெற்றிகளை கருப்புக்கு தந்த 1.e4 இற்கு எதிரான நகர்த்தலுக்கு 1.d4 எனும் முதல் நகர்த்தல் புள்ளிவிபர அடிப்படையில் வெள்ளைக்கு சாதகமான நகர்த்தலாகும்.[1] நியூ இன் செஸ் எனும் சஞ்சிகை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தரவுத்தளத்தில் சேகரித்த ஆட்டங்களில், வெள்ளை 296,200 ஆட்டங்களில் 56.1%, 1.d4 நகர்த்தலை ஆடுவதால் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் 349,855 ஆட்டங்களில் 54.1%, 1.e4 நகர்த்தலில் வெற்றி பெற்றாலும், சிசிலியன் தற்காப்பை எதிர்த்து 145,996 ஆட்டங்களில் 52.3% மட்டுமே வெள்ளையால் வெற்றிகொள்ள முடிந்தது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia