சிஞ்சார் (Sinjar) நகரத்தை சிங்கால் (Shingal) எனும் அழைப்பர்.[2] (அரபி: سنجار,[3]குர்தியம்: Shingal,[4] இந்நகரம் ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், சிஞ்சார் மலையடிவாரத்தில் 522 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2013-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,இந்நகரத்தின் மக்கள்தொகை 88,023.[5] சிஞ்சார் நகரம் பெரும்பாலான யசீதி மக்களின் தாயகமான உள்ளது. மேலும் சிஞ்சார் மலைகள் யசீதி மக்களின் புனித மலையாக உள்ளது.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு இந்நகரத்தை கைப்பற்றி, இராணுவத்தளம் அமைத்து சிங்காரா என பெயரிட்டனர். கிபி 360-இல் சாசானியப் பேரரசு இந்நகரைக் கைப்பற்றினர். கிபி 6-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் இசுலாமிய படையெடுப்புகளால் கலீபா இராச்சியத்தில் இணைக்கப்பட்டது.[6]
2014-இல் இசுலாமிய அரசுப் படைகள் சிஞ்சார் நகரத்தைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான யசீதி மக்களை கொன்று குவித்ததுடன், யசீதி பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.[7][8]
திசம்பர் 2015-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை மீட்ட போது நகரத்தின் காட்சி
13 நவம்பர் 2014-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் உதவியுடன் குர்திஸ்தான் மற்றும் யசீதிப் படைகள் கைப்பற்றினர்.[9]