சிட்டவே
![]() சிட்டவே மியான்மரின் ராகினி மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் கலாதான் ஆறு, மயு மற்றும் லே மரோ ஆறுகள் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கும் இடத்தில் முகத்துவாரம் அருகே அமைந்திருக்கிறது. சிட்டவே நகராட்சி மற்றும் சிட்டவே மாவட்டம் ஆகிய நிர்வாகப் பகுதிக்குள் இந்நகரம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா துறைமுகத்தையும், வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் கடல், ஆறு மற்றும் சாலைகள் கொண்டதான கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டம் சிட்டவே துறைமுகம் ஒரு மையப் புள்ளியாக உள்ளது. பெயர்க்காரணம்சிட்டவே என்ற பர்மியப் பெயர் ராகின் மொழியில் சைதி-டாவியில் இருந்து உருவானது. இதன் பொருள் போர்களின் சங்கமம என்பதாகும். 1784 ஆம் வருடத்தில் பர்மிய மன்னரான போதாவபாயா மராக் யு இராச்சியத்தை கைப்பற்றிய பின், ராகின் வீரர்கள் பர்மிய படையுடன் காலான்டன் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் போர் புறிந்தனர். நிலம் மற்றும் நீர் ஆகியவற்றில் நடந்த போரில் மராக் யு படைகள் தோற்கடிக்கப்பட்டது. போர் நிகழ்ந்த இடம் ராகினி மொழியில் சீதி-டாவீ என அழைக்கப்பட்டது, மேலும் பர்மிய பேச்சு வழக்கில் இது சிட்டவே என அழைக்கப்பட்டது. வரலாறுமுதலில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்து பின்நாளில் சிட்டவே கடல் வணிகத்தில் முக்கிய நகரமாக மாறியது, குறிப்பாக முதல் ஆங்கில-பர்மிய போரைத் தொடர்ந்து, ராகினி மாநிலம் என்று அழைக்கப்படும் அரக்கன் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அரிசி ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது. மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia