சித்தாரா
சித்தாரா (பிறப்பு சித்தாரா நாயர் ) என்பவரு ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் கே. பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் படையப்பா, ஹாலுத தவரு, புது வசந்தம் போன்ற பெருவெற்றிபெற்ற படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவர் தொலைக்காட்சியில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[1][2][3] முப்பது ஆண்டுகளாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்துள்ளார். இவரது சமீபத்திய தெலுங்கு வெற்றிப்படங்களில் ஸ்ரீமந்துடு, சங்கராபரணம், பாலே பலே மகாடுவியா ஆகியவை அடங்கும்.[4] சித்தரா தமிழகத் திரைத்துறைக்கு கின்னஸ் சாதனையாளர் இசாக் இயக்கிய, நாகேஷ் திரையரங்கம் எனும் படத்தில் நடித்ததன் மூலம் மறு பிரவேசம் செய்துள்ளார்.[5][6][7] ஆரம்ப கால வாழ்க்கைகேரளத்தின் கிளிமானூரில் பரமேஸ்வரன் நாயர் மற்றும் வல்சலா நாயர் ஆகியோரின் மூன்று குழந்தைகளில் மூத்தவராக சித்தாரா பிறந்தார். இவரது தந்தை பரமேஸ்வரன் நாயர் மின்சார வாரியத்தில் பொறியாளராகவும், அவரது தாயார் மின்சார வாரியத்திலும் அதிகாரியாக இருந்தார். இவருக்கு பிரதீஷ் மற்றும் அபிலாஷ் என்ற இரண்டு தம்பிகள் உள்ளனர். திருவனந்தபுரத்தின் வட்டப்பாறை, லூர்து மவுண்ட் பள்ளியில் படித்தார். கிளிமனூரில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யபீடம் கல்லூரியில் முன் பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தனது முதல் படமான காவேரியில் நடித்தார்.[8] தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்தமிழ் படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்
தனிப்பட்ட வாழ்க்கைசித்தாரா தன் வாழ்வின் துவக்கதில் எடுத்த முடிவின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.[9] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia