சித்திரத்தையல்

19 ஆம் நூற்றாண்டின் ஆர்மேனியன் திருமண ஆடை மீது அழகிய தங்க சித்திர வேலைப்பாடு.

சித்திரத்தையல் அல்லது பூப்பின்னல் (embroidery) என்பது, சித்திர வேலைப்பாடுடன் கூடிய கைவினைச் செயலாகும். ஊசி மற்றும் நூல் (Yarn), 'நூல் துணி', அல்லது பிற பொருள்களை அலங்கரிக்கும் நேர்த்தியான கைப்பணியாகக் கருதப்படுகிறது. சித்திர வேலைப்பாடுகள், 'உலோக கீற்றுகள்' (metal strips), முத்துக்கள் (pearls), மணிகள் (beads), இறகுகள் (quills), மற்றும் 'வட்டுக்கள்', (sequins) போன்ற பொருள்களைக் கொண்டு ஒருங்கிணைத்துச் செய்யப்படும் கலை மிளிரும் கைப்பணியாகும்.[1]

இந்தியாவில் இக்கலை

இந்தியாவில் சித்திரத் தையற்கலையானது, வரலாற்று முற்காலத்திலிருந்தே பயிலப்பட்டு வந்துள்ளது. சிந்துவெளி நாகரிக மக்கள், இக்கலையைப் பயின்று வந்ததாகவும், மேலும், சித்திரத் தையலுக்குப் பயன்படும் ஊசிகள் அங்கு கிடைத்துள்ளதாகவும், சிந்துவெளிப் பதுமைகளில் சித்திரத் தையலின் ஆடைகள் கண்டறியப்பட்டுள்ளது.[2]

சான்றாதாரங்கள்

  1. "Embroidery". www.mmprinc.net (ஆங்கிலம்). 2015. Archived from the original on 2016-09-28. Retrieved 2016-10-07.
  2. "சித்திரத்தையல்". www.tamilvu.org(தமிழ்). 2016. Retrieved 2016-10-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya