சித்ரா சுப்ரமணியம்
சித்ரா சுப்ரமணியம் துயெல்லா (Chitra Subramaniam Duella) ஓர் இந்தியப் ஊடகவியலாளர் ஆவார். 1989 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தேர்தல் தோல்விக்கு பரவலாக பங்களித்ததாக நம்பப்படும் போபர்ஸ் ஊழல் பற்றிய விசாரணைக்கு இவர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டார். பொது சுகாதாரம், வர்த்தகக் கொள்கை, வளர்ச்சி திசைகள் , ஊடகத் துறையில் கவனம் செலுத்தும் ஜெனீவாவைச் சேர்ந்த CSDconsulting என்ற சிறப்பு ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார். நியூஸ் மினிட் - என்ற செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரும் நிர்வாக ஆசிரியரும் ஆவார். இவர் அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலையங்க ஆலோசகராகவும் இருந்தார். [1] [2] [3] 1989ஆம் ஆண்டில், சிறந்த பெண் ஊடகவியலாளருக்கான சாமேலி தேவி ஜெயின் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4] சொந்த வாழ்க்கையும் கல்வியும்சித்ரா 1958இல் இந்தியாவின் சார்க்கண்டின் சிந்திரியில் பிறந்தார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுநிலை சான்றிதழ் பட்டமும். இந்திய மக்கள் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊடகவியலில் முதுகலை பட்டமும் பெற்றார். இவர் கணிதவியலாளரான முனைவர் ஜியான்கார்லோ துயெல்லா என்பவரை மணந்தார். தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கிறார். இந்த தம்பதியருக்கு நித்யா துயெல்லா என்ற மகளும் [5] நிகில் துயெல்லா என்ற மகனும் உள்ளனர். சித்ரா சிறந்த தெற்காசியப் பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார். [6] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia