சித்ரா (மலையாளம்)
சித்ரா (Chithra; 21 மே 1965-21 ஆகத்து 2021) மலையாளத் திரைத்துறையில் தனது பங்களிப்பிற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார்.[4][5] இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1983ஆம் ஆண்டில் தனது முதல் படமான ஆட்டகலசம் படத்தில் பிரேம் நசீர் மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நடித்தார்.[6] இவர் நடித்த ஓர் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரத்தின் மூலம் பெற்ற புகழ் காரணமாக இவருக்கு "நல்லெண்ணெய் சித்ரா" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.[7] வாழ்க்கை வரலாறு1965ஆம் ஆண்டில் கொச்சி மாதவன் மற்றும் தேவிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார், சித்ரா. இவருக்குத் தீபா என்ற அக்காவும், திவ்யா என்ற தங்கையும் உள்ளனர். இவர் சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.[8] பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், திரைப்பட வாய்ப்பு அதிகமாக வந்ததால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை. 1990ஆம் ஆண்டு விஜயராகவனை மணந்தார். இவர்களுக்கு 1992-இல் மகாலட்சுமி என்ற மகள் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[9] இவர் 21 ஆகத்து 2021 அன்று சென்னையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.[10] தமிழ்த் திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia