சின்னபூவே மெல்லபேசு |
---|
 திரைப்படச் சுவரொட்டி |
இயக்கம் | இராபர்ட் இராச சேகர் |
---|
தயாரிப்பு | எசு. கே. இராசகோபால் |
---|
கதை | இராபர்ட் இராச சேகர் |
---|
இசை | எசு. ஏ. ராஜ்குமார் |
---|
நடிப்பு | |
---|
ஒளிப்பதிவு | இராபர்ட் ராஜசேகர் |
---|
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
---|
கலையகம் | எசுகே பிலிம்சு கம்பைன்சு |
---|
வெளியீடு | 17 ஏப்ரல் 1987 (1987-04-17) |
---|
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
சின்னபூவே மெல்ல பேசு என்பது 1987 ஆவது ஆண்டில் ராபேர்ட் மற்றும் ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கி வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எசு. கே. இராசகோபால் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, ராம்கி, நர்மதா, சுதா சந்திரன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எசு. ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படம் 1987 ஏப்ரல் 17 அன்று வெளியானது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில்தான் . எசு. ஏ. ராஜ்குமார், ராம்கி, நர்மதா ஆகியோர் தமிழில் அறிமுகமாயினர்.[1][2][3]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எசு. ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற 9 பாடல்களையும் அவரே எழுதியிருந்தார்.[4][5][6] இப்படத்தில் தான் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார். தயாரிப்பாளர் திரைப்படத்தின் மெட்டுக்களைக் கேட்டுவிட்டு இசைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்று கூறியதால், 70 இசைக் கலைஞர்கள் கொண்டு பாடல்கள் இசைப் பதிவு செய்யப்பட்டது.[7]
மேற்கோள்கள்