சிந்தாமணி நிகண்டு![]() அப்போது நூலாசிரியர் அகவை 33 இதற்கு ஞானமூர்த்தி என்பவர் பொருளுதவி செய்துள்ளார். புதுவை குமாரவேல் முதலியார் இயற்றிய நேரிசைவெண்பா ஒன்றுடன் சேர்த்து இதில் 401 பாடல்கள் உள்ளன சிந்தாமணி நிகண்டு [1] என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் 1876-இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. இதன் புதிய பதிப்பு 2013-இல் வெளிவந்துள்ளது, பதிப்பாசிரியர்கள் [2] இந்த நூலின் மூலத்தோடு மூலப்பாடல்களுக்கான உரையையும், நூலில் கூறப்பட்ட சொற்பொருளுக்கான அகராதியையும் உருவாக்கி இணைத்துள்ளனர். நூலமைதிநூலானது 386 விருத்தப் பாடல்களால் ஆனது. மற்றும் ஆசிரியர் எழுதிய காப்புச் செய்யுள் ஒன்று, அவையடக்கச் செய்யுள் ஒன்று, அ. சிவசம்புப்புலவர் எழுதிய சிறப்புப் பாயிரப் பாடல் 12 - என 400 பாடல்களைக் கொண்டது. சூடாமணி நிகண்டு நூலின் முதல் 11 தொகுதிகள் போல விருத்தப்பாவால் இதனைச் செய்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார. [3] விருத்தப் பாவால் அமைந்த நூல் ஆதலால் சொற்களின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரும் எதுகை முறையில் இதில் உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர்கள் இவற்றை அகர-வரிசையில் தொகுத்து நூலின் இறுதியில் பதிப்பித்துள்ளனர். தமிழில் நுழைந்துள்ள வடசொற்கள் பலவற்றுக்கும், நிகண்டை இயற்றிய ஆசிரியர் தம் வடமொழிப் புலமையால் தமிழில் நுழைத்துள்ள வடசொற்கள் பலவற்றுக்கும் இந்த நூலில் பொருள் காணமுடியும். [4] நிகண்டு - எடுத்துக்காட்டுப் பாடல்
அடிக்குறிப்பு
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia