சிந்துதேசம்

சிந்துதேசம் வநாயுதேசத்தின் தெற்கிலும்,ஆபீரதேசத்திற்கு மேற்கிலும், சௌவீரதேசத்திற்கு வடக்கிலும், பாரியாத்ரம் என்னும் சிறு குன்றின் மேற்கு அடிவரையிலும், மகாமலையின் தென்மேற்கு தொடர்ச்சி வரையிலும் நீண்டு, அகலம் குறுகியதாய் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

இந்த தேசத்தின் மண் மிகவும் குளிர்ந்ததாகவே இருக்கும், விவசாயத்திற்கு ஏற்ற களிமண் பூமியாய் இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்திற்கு தென் மேற்கு மூலையில் பாரியாத்ரமலை, நீலகிரி மலை என உள்ளது. இந்த மலைத்தொடரின் நான்கு புறத்திலும் காடுகளும், மூங்கில், கடம்பு, வனத்தாழை, திந்துகம், பூர்சம், வேலை, காட்டுத்துளி (கருநாகமரம்) அடர்ந்து காணப்படும், மலைப்பாம்பு, இருதலைப்பாம்பு, ஜலமண்டலி, பதினாறுகால் தேள்( கல்தேள்), யானை, கரடி, புலி, குதிரை,பன்றிமுதலிய விலங்குகள் அதிகம்.

நதிகள்

இமய மலையில் உற்பத்தியாகி தெற்குமுகமாய் ஓடி, சிந்துதேசத்தின் கிழக்கில் ஐராவதிநதியும், விபாசாநதியும் சேர்ந்து இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்கு எல்லையில் ஓடும் சிந்து நதியுடன் இணைகிறது.

விளைபொருள்

இந்த தேசத்தில் பட்டு, கரும்பு, பருத்தி, திராட்சை, முதலியன அதிகமாய் விளைந்தும், இந்த தேசத்தவர்கள் மகாராட்டிரம், ஆந்திரம், யவனம், வங்கம், கோசலம், குரு, சூரசேநம் அகிய தேசங்களில் ரத்தினம், பட்டு முதலியனவையும் வியாபாரம் செய்கின்றனர்.

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 171 -
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya