சின்செங்கு![]() ![]() சின்செங்கு(Ginseng, தாவரவியல் பெயர்:Panax ginseng) என்பது அரளியேசியே குடும்பத்தின் பனாக்சு (Panax) பேரினத்தைச் சேர்ந்த மெதுவாக வளரும் இயல்புடைய, பல்லாண்டு வாழக்கூடிய, சதைப்பற்றுள்ள வேர்களுடன் கூடிய, பதினோரு முற்றிலும் மாறுபட்ட தாவர இனங்களுள் ஒன்று. இது ஆசியாவின் சில பகுதிகளில், குறிப்பாக சீனாவில் சின்சியூ என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு ஆசியாவின், வட அரைக்கோளத்தில் பெரும்பாலும் வட சீனா, கொரியா, கிழக்கு சைபீரியா ஆகிய இடங்களில், பொதுவாக குளிர்ந்த பருவ நிலையில் வளருகிறது. பனாக்சு வியட்நாமென்சிசு என்றறியப் படும் ஒரு வகை சின்செங், உலகின் தென்கோடியில் அமைந்திருக்கும் வியட்நாமில் கிடைக்கப்பெறும். இக்கட்டுரை அழுத்த எதிர்ப்பு ஆற்றல் வாய்ந்த பனாக்சு சின்செங்கு மற்றும் பி. க்வின்க்யுஃபோலியசு ஆகிய பனாக்சுத் தொகுதியைச் சேர்ந்த சின்செங்குகுகளைப் பற்றியது. சின்செனோசைடுகள் இருப்பதே சின்செங்குகின் சிறப்பியல்பு ஆகும். சைபீரிய சின்செங்கு (Eleutherococcus senticosus ) உண்மையில் ஒரு சின்செங்கு அல்ல. வேறொரு தாவரம், சந்தைப்படுத்தும் தொழில்முறை ஏற்பாடாக, சைபீரிய சின்செங்கு என வழங்குகிறது. சதைப்பற்றுள்ள வேருக்கு பதிலாக, இது கட்டையான வேர் கொண்டது. சின்செனோசைடுகளுக்கு (Ginsenoside) பதிலாக, எல்யூதெரோசைடுகள் (Eleutheroside) இதன் வீரியமுள்ள சேர்மமாக உள்ளன. எல்யூதெரோசைடுகள் பொருந்தச்செய்யும் பரம்பரை அலகு கொண்ட பிரிவில் அடங்குகிறது. சொற்பிறப்பியல்சின்செங்கு என்னும் ஆங்கிலச் சொல் ரென்ஷென் (rénshēn) என்னும் சீன மொழிச் சொல்லிலிருந்து உருவானது. (எளிமைப்படுத்தியது: 人参; மரபுவழியில்: 人蔘). இதன் நேரடிப் பொருள் "மனித வேர்" என்பதாகும். இதன் வேர், முட்கரண்டி வடிவத்தில், ஒரு மனிதனின் கால்களைப் போன்று இருப்பதைக் குறிக்கும் வகையில் இப்பெயர் பெற்றது. ஆங்கில ஒலிப்பு, தென் சீன மொழி வாசிப்பிலிருந்து வருகிறது. இது காண்டோநீஸ் (Cantonese) மொழியில் உள்ள ஜென் ஷென் (jên shên) (Jyutping: jan4sam1) என்பதை ஒத்துள்ளது. இது, தென் மின் மொழியின் ஒலிப்பினை போன்றுள்ளது. "தென் ப்யூஜிய மொழியான மின் நான் (Hokkien: Bân-lâm-gú) உச்சரிப்பான "ஜின்-சிம்" என்பதன் ஒலிப்பைப் போன்றுள்ளது எனலாம். இதன் தாவரப் பேரினப் பெயரான பனாக்சு என்பதற்கு, கிரேக்க மொழியில் "அனைத்து நோய் மருந்து" என்பது பொருள். இது "பனாசியா" என்பதன் மூலத்தைப் போன்றது. சீன மருத்துவத்தில் இது தசை நெகிழ்த்தியாகப் பரவலாகப் பயன்படுத்தியதை சூசகமாகக் கொண்டு, லின்னேயஸ் அறிந்திருந்ததால் இப்பேரினத்திற்கு இப்பெயரை வைக்கப்பட்டது. மரபுவழிப் பயன்கள்அமெரிக்க சின்செங்கு (Panax quinquefolius), ஆசிய சின்செங்கு (Panax ginseng ) வேர்கள், அழுத்த எதிர்ப்பியாகவும் (adaptogen), பாலுணர்ச்சி ஊக்கியாகவும், ஊட்டமளிக்கும் ஊக்கியாகவும் நம்பப்பட்டு, உள்மருந்தாக (வாய்வழியே) எடுத்துக்கொள்ளப்படுகிறது. வகை II நீரிழிவு நோய், ஆண்களில் பாலியல் பிறழ்ச்சி ஆகியவற்றுக்கான சிகிச்சையிலும் பயன்படுகின்றன. இதன் வேர் பெரும்பாலும் உலர்ந்த நிலையில் மொத்தமாகவோ, துண்டுகள் ஆகவோ கிடைக்கிறது. சின்செங்கு இலை, அதிக விலை கொண்டதில்லை என்றாலும், சில நேரங்களில் பயன்படுகிறது. அது வேருடன் பெரும்பாலும் உலர்ந்த நிலையிலேயே கிடைக்கிறது. இந்த மூலக்கூறை சில பிரபலமான ஆற்றல் அளிக்கும் பானங்களிலும் (energy drinks) வழங்கலாம். பொதுவாக "தேநீர்" வகைகளிலும் செயல்பாட்டு (functional) உணவுகளிலும் இருக்கும். பொதுவாக, தாழ்புலன் மருத்துவ அளவைகளில் (subclinical doses) சின்செங்கு சேர்க்கப்பட்டிருக்கும். அளவிடக்கூடிய மருத்துவ விளைவுகள் இதற்கு இருப்பதில்லை எனவும் கருதப்படுகிறது. ஒப்பனைத் தயாரிப்புகளிலும் இது பயனாகிறது. நவீன அறிவியலும் சின்செங்கும்அறிவியல் அடிப்படையில் சின்செங்குகின் மருத்துவப் பயன்களை உறுதிப்படுத்தவோ, அளவிடுவதோ கடினம். ஜின்செங்கின் தர, வகை மற்றும் அளவு வேறுபாடுகள் காரணமாக, ஜின்செங் சார்ந்த ஆய்வுகளில் முரணான ஆய்வு முடிவுகளே பெறப் பெற்றன. சின்செங்குகின் விளைவுகள் குறித்த உயர்தர ஆய்வுகள் மிகவும் அரிதானவை.[1] சின்செங்கு, ஒரு அழுத்த எதிர்ப்பியாக (உடலின் (இரத்த) அழுத்தத்தை எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கும் பொருளாக, விளம்பரங்களின் மூலம் சந்தைப்படுகிறது. சின்செங்கு புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்பு குணங்கள் கொண்டுள்ளதால் இதனை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.[2] ஆனால், அழுத்தம் இருக்கும்போது இது வாழ்நாள் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துகிறதா என்பதைப் பரிசோதிக்க விலங்குகளைக் கொண்டு செய்த ஆய்வுகளில் எதிர்மறை முடிவுகளே கிடைத்தன.[3] மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகம் நடத்திய, வாழ்க்கைத் தர மேம்பாட்டை மதிப்பிடுவதற்காக, குறிப்பின்றி அமைந்த, இரட்டை-இருண்மை முறையில் மேற்கொண்ட ஓர் ஒப்பாய்வு, இது உணவுத்திட்டத்தில் கூடுதல் சத்துப்பொருளாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடுகிறது.[4] ஆங்காங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில், சின்செங்குகிற்கு அழற்சி எதிர்ப்புத் தன்மை உள்ளது என்பது தெளிவானது. இவ்வாய்வில் அவர்கள் கண்டறிந்த ஒன்பது ஜின்செனோசைடுகளில் ஏழு ஜின்செனோசைடுகள், CXCL-10 என்னும் அழற்சி மரபணுவின் குறியீட்டுக்கோவையில் உறைவு கொள்ளக்கூடியவை என்பது கண்டறிந்தனர்.[5]பி. சின்செங்கு , விலங்கு மாதிரிகளில் புற்றுநோயுடன் தொடர்புள்ள சிறப்பியல்புகளில் உறைவுகொள்வதாகத் தெரிகிறது. ஆனால், மனிதர்களில் இதன் தாக்கம் தெளிவாக இல்லை.[5] குறிப்பின்றி அமைந்த, இரட்டை-இருண்மை முறையில் மேற்கொண்ட ஓர் ஒப்பாய்வு மாதிரி ஆய்வில், சின்செங்கு புற்றுநோயாளிகளின் சோர்வைக் குறைப்பதாக குறிப்பிட்டார்கள்.[6] அதிகாரபூர்வத் தொகுப்புகள் உட்பட்ட இலக்கியங்களில், சின்செங்குகுடனான இடைவினைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சின்செங்கும், இனப்பெருக்கமும்தென் இலினொய் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி, 2002 ஆம் ஆண்டில், ஆய்வக விலங்குகளில் மேற்கொண்ட ஆய்வில், ஆசிய, அமெரிக்க சின்செங்கு வடிவங்கள் இரண்டுமே பாலுணர்வு உந்துதலையும் புணர்ச்சிச் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றன என்பதை கண்டறிந்தார்கள். (இது நியூ யார்க் அறிவியல் கழக ஆண்டுக் குறிப்பில் பதித்துள்ளது.). சின்செங்குகின் இவ்விளைவுகள், சுரப்பிகளின் சுரத்தலில் நிகழும் மாற்றங்களினால் ஏற்படுவதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைய நரம்பியல் அமைப்பிலும், விரை-சூலக இயக்குநீர் திசுக்கள் மீதும், சின்செங்கும், அதன் சின்செனோசைடு கூறுகள் ஏற்படுத்தும் நேரடித்தாக்கத்தினால் இவ்விளைவுகள் ஏற்படக்கூடும்.[9][10] ஆண்களில், ஆண்குறி விறைப்புக்கு, சின்செனோசைடுகள் உதவக்கூடும்.[11] இது, மரபுவழிச் சீன மருத்துவம் மற்றும் திணைக்குடி அமெரிக்க மருத்துவம் ஆகியவற்றில் சின்செங்குகின் பயன்பாடு இதனுடன் ஒத்திருக்கிறது. சின்செங்குகில் ஃபைடோஎஸ்ட்ரோஜென்கள் உள்ளதாகத் தெரிகிறது.[12][13][14] பக்க விளைவுகள்பொதுவாகப் பொறுத்துக் கொள்ளப்பட்டாலும், கடைகளில் எளிதில் வாங்கக்கூடிய அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் சேர்த்து சின்செங்குகை உட்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. யுமாஸ் ஆம்ஹெர்ஸ்ட் வெளியிட்டுள்ள, விளையாட்டுச் சத்துணவு குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Sports Nutrition FAQ) என்னும் வெளியீட்டின்படி, பி. சின்செங்குகின் மிகப் பொதுவான பக்க விளைவு தூக்கமின்மையாகும்.[15]ஆயினும், சின்செங்கு தூக்கம் வருவதை தடை செய்வதில்லை என்று பிற ஆதாரங்கள் கூறுகின்றன.[16]குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைவலிகள், மூக்கில் குருதி வடிதல்[17], உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முலைவலி ஆகியவை பிற பக்க விளைவுகளில் அடங்குகிறது.[18]உளச்சோர்வு கொண்ட நோயாளிகள், உளச் சோர்வு எதிர்ப்பிகளை சின்செங்குகுடன் சேர்த்து உட்கொண்டால், சின்செங்கு அவர்களில் வெறியைத் தூண்டக் கூடும். மிகை அளவுபொதுவான அழுத்த எதிர்ப்பு சின்செங்குகுகளான பி. சின்செங்கு மற்றும் பி. கவின்க்யுஃபோலியா ஆகியவை, அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும், ஒப்பு நோக்கப் பாதுகாப்பானதாகும். நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் முனைப்பாக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, ஒருவர் மிகவும் வலுவிழந்திருந்தாலொழிய, தொற்று எதிர்ப்பு மூலிகைகளுடன் சேர்த்து பி. சின்செங்குகை அளிப்பது, சீன மருத்துவத்தில் பரிந்துரைப்பதில்லை. சீன மூலிகையாளர்கள் இதை நம்பினர். கி.பி. 1757 ஆண்டில், க்விங் வம்சத்தின் காலத்தில் வாழ்ந்த ஜ்யு டசுன் என்பவர், சின்செங்கு குறித்த தனது சிறிய கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்: "கூடுதல் சத்துக்காக மட்டும் ஒருவர் சின்செங்குகைக் கொடுப்பார் என்றால், அவர் தீய விளைவுகளுக்கே ஊட்டமளித்து, அவை தங்கி விட உதவுகிறார் எனலாம். ஒரு சில நேர்வுகளில், தீய விளைவுகள், அத்தகைய தவறான சிகிச்சை காரணமாக உடலை விட்டு ஒருபோதும் நீங்கா. தீவிர நேர்வுகளில், இறப்பு தவிர்க்க முடியாதது."[19] சின்செங்கு வகைகள்![]() அமெரிக்க சின்செங்கு (வேர்)மரபுவழிச் சீன மருத்துவத்தின்படி, அமெரிக்க சின்செங்கு "யின்" (yin) ஆற்றலை வளர்க்கிறது; உடலில் உள்ள மிகையான "யாங்" (yang) ஆற்றலைச் சுத்தம் செய்கிறது. உடலை அமைதிப்படுத்துகிறது. அமெரிக்க சின்செங்கு, யின் (நிழல், குளிர், எதிர்மறை, பெண்) தன்மையை அதிகரிக்கிறது என்றும், கிழக்காசிய சின்செங்கு, யாங் (சூரிய ஒளி, வெப்பம், நேர், ஆண்) தன்மையை அதிகரிக்கிறது என்றும் கருதப் படுகிறது. இதற்குக் காரணம், மரபுவழிச் சீன மருத்துவத்தின்படி, குளிர் பிரதேசங்கள் அல்லது மலைகளுக்கு வடக்கே அல்லது ஆறுகளுக்குத் தெற்கே உள்ள உயிரிகள் யாங்கில் உறுதியானவை என்பதும், வெப்பப் பிரதேசங்கள் அல்லது மலைகளுக்குத் தெற்கே அல்லது ஆறுகளுக்கு வடக்கே உள்ளவை யின்னில் உறுதியானவையாக உள்ளன. இதனால் இரண்டும் சமநிலைப் படுகின்றன. சீன/கொரிய சின்செங்கு, மரபுக்காலங்களில், மிகவும் குளிரான பிரதேசமாக கொரியர்கள் அறிந்திருந்த, வட சீனா மற்றும் கொரியாவில் வளர்கிறது. எனவே, அந்தப் பகுதியில் இருந்து வரும் சின்செங்கு யாங் தன்மை மிகுந்ததாகக் கருதுகிறது. தொடக்கத்தில், அமெரிக்க சின்செங்கு, ஆங்காங்கை அடுத்துள்ள கடற்துறைமுகமான, மிதவெப்ப மண்டல குவாங்ஜௌ (Guangzhou) வழியாக சீனாவில் இறக்குமதியானது. வெப்பப் பிரதேசத்திலிருந்து வந்த காரணத்தால், அமெரிக்க சின்செங்கு, யின் தன்மைக்குச் சிறந்ததாக இருக்கும் என்று சீன மருத்துவர்கள் நம்பினர். ஆனால், அமெரிக்க சின்செங்கு மிதவெப்பப் பகுதிகளில்தான் வளரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எவ்வாறாயினும், இந்த வேர், நீர்மங்களை உண்டாக்குவதால், யின் தன்மை அதிகமுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது சரியானதே ஆகும்.[20]
ஆசிய சின்செங்கு (வேர்)![]() மரபுவழிச் சீன மருத்துவத்தின்படி, பனாக்சு சின்செங்கு, யாங் ஆற்றலை அதிகரித்து சுழற்சியை மேம்படுத்துகிறது; குருதி ஓட்டத்தை அதிகரித்து உடல்நலக்குறைவுக்குப் பின் ஏற்படும் சோர்விலிருந்து மீள்வதற்கு உதவி, உயிரூட்டுகிறது; உடலை ஊக்குவிக்கிறது. பனாக்ஸ் சின்செங்கு நான்கு வடிவங்களில் கிடைக்கிறது:
சிவப்பு சின்செங்குகொரிய மொழியில் 홍삼 (ஹாங் சாம்) என்றழைக்கப்படும் சிவப்பு சின்செங்கு வேகவைத்த அல்லது சூரிய ஒளி உலர்வு முறையிலோ சூடேற்றிய பனாக்ஸ் சின்செங்கு ஆகும். இது அடிக்கடி ஒரு மூலிகைத் தேறலில் ஊற வைக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்த வேர் மிகவும் நொய்மையானதாகிறது. இந்த வகை சின்செங்கு, மரபாக பாலியல் செயல்பாட்டைத் தூண்டுதல், ஆற்றலை அதிகரித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது. சிவப்பு சின்செங்கு எப்பொழுதும் விளைந்த வேர்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக தென் கொரியா அல்லது சீனாவிலிருந்து வரும் வேர்களில் தயாரிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில், மலட்டுத்தன்மை மீதான கொரிய சிவப்பு சின்செங்குகின் விளைவுகள் குறித்த, துவக்க நிலையிலான, இரட்டிப்பு-இருண்மை முறையில் அமைந்த, குறுக்கேற்ற ஆய்வு மேற்கொண்டார்கள். ஆண்களில் விறைப்புப் பிறழ்ச்சிக்கான சிகிச்சையில் ஒரு ஆற்றல் வாய்ந்த மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம் என இவ்வாய்வறிக்கை கூறியது.[22] [23] சிவப்பு சின்செங்கு, இரையகப் புற்றுநோய், கட்டுப்பாட்டுக்கு எதிராக, மீண்டும் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது என்று ஓர் ஆய்வு காட்டுகிறது.[23] எலிகள் மீதான சின்செங்குகின் விளைவுகள் குறித்த ஓர் ஆய்வில், வெண் சின்செங்கு மற்றும் சிவப்பு சின்செங்கு ஆகிய இரண்டுமே புற்றுநோய் தோன்றும் வாய்ப்பைக் குறைக்கின்றன என்றாலும், சிவப்பு சின்செங்கு ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம் என்பது கண்டறியப்பட்ட.[24] ஸங் ஹெச், ஜங் ஒய்எஸ், சோ ஒய்கே ஆகியோர் மேற்கொண்ட ஓர் ஆய்வு, HIV-1 தொற்று உள்ள நோயாளிகளுக்கு மீச்செயல் பின்நச்சுயிரி எதிர்ப்பு சிகிச்சையுடன் கொரிய சிவப்பு சின்செங்குகும் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட பயன்மிக்க விளைவுகளைக் காட்டுகிறது.[25] ஃபால்கரிநால் எனப்படும், பதினேழு-கார்பன் டைன் (diyne) கொழுப்பு சத்துள்ள ஆல்கஹால், காரட் மற்றும் சிவப்பு சின்செங்கு ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது, தொடக்க நிலையில் உள்ள, முலையின் மேல்புறத் தோலின் செல்களில் ஏற்படும் (மார்பகப்) புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டதாகக் கூறப்படுகிறது.[26] சின்செங்குகில் உள்ள பிற அசிடைலீன் தன்மை கொண்ட கொழுப்புச் சத்து ஆல்கஹால்களான பனாக்சகால், பனாக்சிடால், பனாக்சிட்ரையால் ஆகியவை நோய்க்கிருமி எதிர்ப்புத் தன்மை கொண்டவை.[27] காட்டு சின்செங்குகாட்டு சின்செங்கு, மனிதர்கள் நட்டு வளர்க்காத இயற்கையான காட்டு வளங்களாகும். அது விளையுமிடத்தில் அறுவடை செய்கிறார்கள். ஒப்புநோக்க, காட்டு சின்செங்கு அரிதானது. அண்மைக்காலத்தில் இதன் தேவை அதிகமாக இருப்பதால் இது அருகிவருகிறது. புதிய தாவரங்கள் வளரத் துவங்கும் முன்பே, இவை வேகமாக அறுவடை செய்கிறார்கள். (சின்செங்கு வேர் முதிர்ச்சி அடைய பல ஆண்டுகள் தேவை). காட்டு சின்செங்கு, ஆசிய, அமெரிக்க வகையாக இருக்கக் கூடும். இதை சிவப்பு சின்செங்குகாகப் பதப்படுத்த முடியும். மெயின், டென்னஸீ, விர்ஜினியா, வட கரோலினா மற்றும் கிழக்கு விர்ஜினியா ஆகிய இடங்களில் காடுகளில் வளர்க்க அமெரிக்க சின்செங்கு திட்டங்கள் உள்ளன.[28][29] ஐக்கியத் தாவரக் காப்பாளர்கள் (United Plant Savers) என்னும் அமைப்பு, இயற்கை வாழ்விடங்களை மீட்கவும், மீதமுள்ள காட்டு சின்செங்கு மீதான நெருக்கடியை நீக்கவும் சின்செங்குகை, காடுகளில் பயிரிடுவதை ஊக்குவிக்கிறது. அவர்கள் அறிவுரைகள் வழங்குவதுடன், குருத்துவேர் மூலங்களையும் அளிக்கின்றனர். காடுகளில் வளர்க்கும் தாவரங்கள் அதே வயதுடைய காட்டு சின்செங்குகிற்கு ஒப்பான மதிப்பு உடையவை ஆகும். சின்செங்கு மாற்றுகள்பெரும்பாலும் அழுத்த எதிர்ப்பிகளான இத்தாவரங்கள், சில நேரங்களில் சின்செங்கு என்றே குறிப்ட்டாலும், அவை வேறு தாவரக் குடும்பம் அல்லது அதன் பேரினத்தைச் சேர்ந்தவை ஆகும். ஜின்செனோசைடுகள் மட்டுமே சின்செங்குகின் பயன்திறனை வரையறுப்பதில்லை. எனினும், ஜியாஒகுலான் மட்டுமே உண்மையில், ஜின்செனோசைடுகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கூறுகளைக் கொண்டவை ஆகும். இவற்றில் ஒவ்வொரு தாவரமும் வெவ்வேறு பயன்பாடுகளைக் கொண்டவை என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் பண்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.[30]
சின்செங்குகுகள் எனச் சுட்டப்படும், அழுத்த எதிர்ப்பிகளல்லாத, பிற தாவரங்கள் (இவற்றில் நோடோசின்செங்கு பனாக்ஸ் பேரினத்தைச் சார்ந்த, பிற இனங்கள்):
குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia