சின் சகோதரத்துவக் கூட்டணி
![]() சின் சகோதரத்துவக் கூட்டணி (Chin Brotherhood Alliance (சுருக்கமாக:CBA), தென்கிழக்காசியாவின் மியான்மர் நாட்டின் சின் மாநிலம், மாகுவே மண்டலம் மற்றும் சாகைங் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மியான்மர் அரசுக்கு எதிராக இயங்கும் பல ஆயுதக் குழுக்களின் அரசியல் கூட்டணி ஆகும். 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மியான்மர் உள்நாட்டுப் போர் (2021–தற்போது வரை)|மியான்மர் உள்நாட்டுப் போரின்]] போது இக்கூட்டணி 30 டிசம்பர் 2023 அன்று நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மியான்மரில் சின் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதாகும்.[3]சின் சகோதரத்துவக் கூட்டணியின் ஆயுதக் குழுக்கள் சின் மாநிலத்தின் தெற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இக்கூட்டணிப் படைகள் சின்லாந்து தேசிய இராணுவம் மற்றும் மியான்மர் அரசு இராணுவத்துடன் மோதல் போக்கைக் கொண்டுள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia