சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து (Sippikkul Muthu), கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், இராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் சுவாதிமுத்யம் (Swati Mutyam) என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படமானது பெங்களூர் பல்லவி திரையரங்கில் தெலுங்கு மொழியில் அதிகபட்சமாக 450 நாள்கள் வரை ஓடியது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு இந்தி மொழியில் அனில் கபூர் நடிப்பில் ஈஸ்வர் எனும் பெயரில் இயக்குநர் கே. விஸ்வநாத் மீண்டும் படமாக்கினார். 2003 ஆம் ஆண்டு கன்னட மொழியில் இக்கதை சுவாதி முத்து எனும் பெயரில் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ராஜேந்திர பாபு இயக்கத்தில் நடிகர் சுதீப், மீனா ஆகியோர் நடித்திருந்தனர். நடிப்பு
தயாரிப்புதமிழ்ப் பதிப்பில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் பின்னணிக் குரல் கொடுத்தார்.[1] பாடல்கள்இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ்ப் பாடல் வரிகள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். பாடல்களைப் பாடியோர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா ஆகியோராவர்.[2]
விருதுகள்
மறுஆக்கங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia