சிரஞ்சீவி சர்ஜா
சிரஞ்சீவி சர்ஜா (Chiranjeevi Sarja, 17 அக்டோபர் 1980 - 7 சூன் 2020) என்பவர் கன்னடத் திரைப்படங்களில் நடித்த ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] இவர் நடிகர் துருவா சர்ஜாவின் சகோதரர், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகன், மற்றும் மூத்த கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைசர்ஜா பெங்களூரில், அம்மாஜி மற்றும் விஜய் குமார் ஆகியோருக்கு பிறந்தார்.[2] பெங்களூரில் உள்ள பால்ட்வின் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு பெங்களூரில் உள்ள விஜயா கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் தனது மாமா அர்ஜுன் சர்ஜாவுடன் உதவி இயக்குநராக சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கைஅக்டோபர் 2017 இல், இவர் நடிகை மேகனா ராஜுடன் நிச்சயதார்த்தம் செய்தார்.[4] பின்னர் 30 ஏப்ரல், 2018 அன்று ஒரு கிறிஸ்தவ முறைப்படி, இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்,[5] அதைத் தொடர்ந்து அரண்மனை மைதானத்தில் 2 மே, 2018 அன்று ஒரு பாரம்பரிய இந்து முறைப்படி, திருமண விழா நடைபெற்றது.[6] தொழில்சர்ஜா சுமார் 22 படங்களில் நடித்தார், இது 2009 ஆம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா திரைப்படத்தில் தொடங்கி, இது அவரது மாமா கிஷோர் சர்ஜா இயக்கியது மற்றும் சிறந்த அறிமுகத்திற்கான (ஆண்) புதுமையான திரைப்பட விருதைப் பெற்றது.[7] இவரது பல படங்கள் பிற மொழிப் படங்களின் மொழிபெயர்ப்புகளாக இருந்தன, அதிரடி திரைப்படமான வரதானாயகா (2013), திகில் திரைப்படமான விசில் (2013), திகில் நகைச்சுவை திரைப்படமான சந்திரலேகா (2014), அதிரடி திரைப்படமான ருத்ர தாண்டவா (2015) மற்றும் அதிரடி திகில் திரைப்படமான அம்மா ஐ லவ் யூ (2018) போன்ற திரைப்படங்கள் அடங்கும்.[8][9] இறப்பு6 ஜூன் 2020 அன்று, சர்ஜாவுக்கு வலிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அடுத்த நாள், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதியம் 1:10 மணியளவில் சரிந்து விழுந்தார்.அவர் ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு "பதிலளிக்க முடியாத நிலையில்" கொண்டு செல்லப்பட்டார்; மாலை 3.48 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதய நிறுத்தம் மரணத்திற்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறது.பசவனகுடியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சர்ஜாவின் உடல் அஞ்சலிக்காக நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் வருகை தந்தனர்.அவரது இறுதிச் சடங்கு ஜூன் 8ஆம் தேதி கனகபுராசாலையில் உள்ள துருவா சர்ஜாவின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia