கனகபுரா
![]() கனகாபுரா (Kanakapura) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் மற்றும் கனகபுரா தாலுகாவின் தலைமையகமும் ஆகும். இந்நகரம் பெங்களூரு நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம் பட்டு மற்றும் கிரானைட் உற்பத்திக்கு பிரபலமானது ஆகும்.[1] இது கர்நாடக மாநிலத்தின் பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ளது மற்றும் இந்த நகரம் ஒரு சுற்றுலாத் தலமாகவும், கர்நாடக மாநிலம் முழுவதிலும் அடிக்கடி பார்வையிடப்படும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாகவும் உள்ளது. ஏனெனில், இந்நகரம் தீவிர மலையேறுபவர்கள் முதல் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் தன்னகத்தே சில ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது. நிலவியல்கனகபுரா 12°33′N 77°25′E / 12.55°N 77.42°E என்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது.[2] இதன் சராசரி உயரம் 638 மீட்டர் (2093 அடி) ஆகும். கனகபுரா தேசிய நெடுஞ்சாலை 209 இல் பெங்களூருக்கு (தலைநகரம்) தெற்கே 55 கி.மீ. தொலைவில் ஆர்க்காவதி ஆற்றின் கரையில் (காவேரி நதியின் அவதாரம்) மற்றும் ராமநகரத்திலிருந்து 27 கி.மீ மற்றும் மைசூரிலிருந்து 96 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 209 (பெங்களூர் - கோயம்புத்தூர்) கனகபுரா வழியாக செல்கிறது. மொழிகள்கன்னடம் முக்கிய மற்றும் அலுவல் மொழியாக உள்ளது. குறிப்புகள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia