சிலோவாக்கிய தேசியக் காற்பந்து அணி
சிலோவாக்கியா தேசிய காற்பந்து அணி (Slovakia national football team, Slovenské národné futbalové mužstvo) என்பது சிலோவாக்கியாவின் தேசிய காற்பந்து அணியாகும். இது சிலோவாக்கிய காற்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது.[1] 1993 இல் சிலோவாக்கியா என்ற புதிய நாடு உருவானதை அடுத்து இவ்வணி செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணியில் இருந்து பிரிந்து புதிய அணியாக உருவெடுத்தது. சிலோவாக்கிய அணி 2010 உலகக்கோப்பை காற்பந்து, யூரோ 2016 ஆகியவற்றில் விளையாடத் தகுதி பெற்றது. 2010 உலகக்கோப்பையின் போது சிலோவாக்கிய அணி குழுநிலை ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வென்று, அடுத்த சுற்றுக்குத் தெரிவானது. இதுவே இவ்வணி விளையாடிய முதலாவது முக்கிய கால்பந்து வாகையாளர் போட்டித்தொடராகும். சிலோவாக்கியா பிரான்சில் நடைபெற்ற யூரோ 2016 ஐரோப்பியப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்று, பிஃபா உலகத் தரவரிசையில் 15வது இடத்தைக் கைப்பற்றியது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia