சிவானந்தா காலனி
சிவானந்தா காலனி (Sivananda Colony) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவானந்தா காலனி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'21.0"N 76°57'23.4"E (அதாவது, 11.022500°N 76.956500°E) ஆகும். அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு, சாய்பாபா காலனி ஆகியவை சிவானந்தா காலனிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். போக்குவரத்துசாலைப் போக்குவரத்துகோயம்புத்தூரில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை சிவானந்தா காலனி வழியாகச் செல்கின்றன. தொடருந்து போக்குவரத்துசிவானந்தா காலனியிலுள்ள கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் தரம் உயர்த்தப்பட்டு கோவையின் இரண்டாவது சந்திப்பு தொடருந்து நிலையமாகத் திகழ வேண்டுமென, தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரால், மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.[2] 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம், சிவானந்தா காலனியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலுள்ளது. வான்வழிப் போக்குவரத்துஇங்கிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், தொழிலதிபர்கள் அதிகம் வந்து செல்லுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கல்விபள்ளிஇங்குள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாணவர்களின் கல்வி மற்றும் செயல்திறன் ஊக்கத்திற்கு பேருதவியாக இருக்கிறது. ஆன்மீகம்கோயில்இங்குள்ள கற்பக விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3] அரசியல்சிவானந்தா காலனியானது, கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி. ஆர். நடராஜன் ஆவார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia