சி. சே. மார்ட்டின்
சிரிலஸ் சேவியர் மார்ட்டின் (Cyrillus Xavier Martyn, பிறப்பு: 14 மார்ச் 1908)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார்.[2] அதன் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5] மார்ட்டின் 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] மார்ட்டின் உரோமன் கத்தோலிக்க மதத்தவர் ஆவார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia