இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965
இலங்கையின் 6வது நாடாளுமன்றத் தேர்தல் 1965 மார்ச் 22 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. பின்னணி1964 டிசம்பரில் லேக்ஹவுஸ் பத்திரிகைகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு நாடாளுமன்றத்தில் பலம் இழந்தது. பண்டாரநாயக்காவின் தாராள தேசியமயமாக்கல் கொள்கை காரணமாக இலங்கைத் தீவின் வணிக சமூகத்தினரின் அதிருப்திக்கு அவர்கள் ஆளாக வேண்டி வந்தது. இதனால் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. தீவிர உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பங்கீட்டு முறை நாட்டில் அமுல் படுத்தப்பட்டது. சுதந்திரக் கட்சிக்கும் அவர்களுன் மார்க்சியக் கூட்டணிக்கும் எதிராக தேசிய முன்னணி ஒன்றை அமைக்கவிருப்பதாக ஐதேக வாக்குறுதி அளித்தது. சிங்களத் தேசியவாதிகளுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என ஐதேக தலைவர் டட்லி சேனநாயக்கா வாக்குறுதி அளித்தார். முடிவுகள்ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia