சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு (ஆட்சி காலம்: 1716–1799) (Misl) என்பது தன்னாட்சியுரிமை கொண்ட சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பாகும்.[1][2]சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டுகளில் சீக்கியர்கள் அதிகம் வாழும் தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதிகளில், மொகலாயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், சீக்கிய சமயத்தை பாதுகாக்கவும் உருவானது.[3] சீக்கிய சிற்றரசுகள் படைபலத்திலும், பரப்பளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும், மற்ற சிற்றரசுகளின் உதவியுடன் மொகலாயர் ஆதிக்கத்தில் இருந்த சீக்கியர்களின் பகுதிகளை கைப்பற்றி, சீக்கிய அரசை விரிவுபடுத்தியும், நிதி ஆதாரங்களையும் குவித்தனர்.[4] சீக்கியக் கூட்டமைப்பில் உள்ள சிற்றரசுகள் அமிர்தசரஸ் நகரில் ஆண்டிற்கு இரு முறை கூடி, அரசியல், சட்ட ஒழுங்கு குறித்து விவாதித்தனர்.
வரலாறு
மொகலாயப் பேரரசன் ஔரங்கசீப், சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேஜ்பகதூரை தலைசீவியதால், மனம் புண்பட்ட சீக்கியர்கள் கிளர்தெழுந்து, மொகலாயர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, சீக்கியப் போர்ப் படைகளை நிறுவினர் [5] பின்னர் ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் அனைத்து சீக்கிய சிற்றரசர்கள் கூட்டமைப்பு ஒன்று கூடி 1799ஆம் ஆண்டில் சீக்கியப் பேரரசை நிறுவினர்.
சீக்கிய சிற்றரசுகள் சட்லஜ் ஆற்றினை மையமாகக் கொண்டு, இரண்டு முக்கியப் பிரிவாக பிரிந்து ஆண்டன. சட்லஜ் ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள 11 சீக்கிய சிற்றரசுகளை மஜ்ஜா சீக்கியர்கள் என்றும், சட்லஜ் ஆற்றின் தெற்கு பகுதியை ஆண்ட சீக்கிய சிற்றரசுகளை மால்வா சீக்கியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்..
Ahmad Shah Batalia, Appendix to Sohan Lal Suri’s Umdat-ut-Tawarikh. Daftar I, Lahore, 1X85, p. 15; Bute Shahs Tawarikh-i-Punjab, Daftar IV, (1848), (MS., Ganda Singh’s personal collection. Patiala), p. 6; Kanaihya Lal, Tarikh-i-Punjab, Lahore, 1877, p. 88; Ali-ud-Din Mufti, Ibratnama, Vol. I, (1854), Lahore, 1961, p. 244. Muhammad Latif, History of the Punjab (1891), Delhi, 1964, p. 296.
Hari Ram Gupta, History of the Sikhs: Sikh Domination of the Mughal Empire, 1764–1803, second ed., Munshiram Manoharlal (2000) பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-215-0213-6
Hari Ram Gupta, History of the Sikhs: The Sikh Commonwealth or Rise and Fall of the Misls, rev. ed., Munshiram Manoharlal (2001) பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-215-0165-2
Gian Singh, Tawarikh Guru Khalsa, (ed. 1970), p. 261.