சீதா ராமன் (தமிழ் தொலைக்காட்சித் தொடர்)
சீதா ராமன் (Seetha Raman) என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்ப பின்னணியைக் கொண்ட காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இத்தொடரில் பிரியங்கா நல்கரி [1]ஸ்ரீ பிரியங்கா, ரேசுமா பசுபுலேட்டி மற்றும் செய் டிசோசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடர் 20 பெப்ரவரி 2023 ஆம் ஆண்டு முதல் மே 4, 2024 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 352 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[2] கதைசீதாவின் (பிரியங்கா நல்காரி) மூத்த சகோதரி மதுமிதா தான் முன்பு காதலித்த ராம் (செய் டிசோசா) என்ற நபரை சீதா திருமணம் செய்து கொள்ளும் கதை. ஆனால் அவள் மூத்த சகோதரி தோற்றத்தால் சமூகம் மற்றும் ராமனின் குடும்பத்தில் இருந்து நிராகரிப்பை எதிர்கொண்டாள். எல்லா முரண்பாடுகளையும் மீறி தன் கணவனை வெல்வதில் சீதை எப்படி உறுதியாக இருக்கிறாள் என்பதை கதை சொல்கிறது. நடிகர்கள்முக்கிய கதாபாத்திரம்
தொடர்புடையவர்கள்
தயாரிப்புநடிப்புரோஜா (தொலைக்காட்சித் தொடர்) புகழ் பிரியங்கா நல்கரி[3][4][5] சீதையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[6] அவருக்கு ஜோடியாக செய் டிசோசா ஆண் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை ராணி[7] மற்றும் ரேச்மா பசுபுலேட்டி [8] முக்கிய வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.சாக்சி சிவா மற்றும் வினோதினி சீதை மற்றும் மதுமிதாவின் அப்பா மற்றும் அம்மாவாக நடித்துள்ளனர். வெளிவரும் தேதிஇதன் முதல் விளம்பரம் 2023 சனவரி 31 அன்று வெளியிடப்பட்டது. இதில் கதாநாயகி பிரியங்கா நல்காரி அறுமுகத்துடன் தலைப்பின் பெயர் வெளியிடப்பட்டது.[9] இரண்டாவது விளம்பரம் 2023 பெப்ரவரி 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் பிரியங்கா நல்காரி , கதாநாயகன் செய் டிசோசா, ரேச்மா பசுபுலேட்டி மற்றும் அக்சிதா போபையா ஆகியோர் 2 நிமிட கதைப் பாடலை வெளிப்படுத்தினர்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia