சுண்டக்காமுத்தூர்
சுண்டக்காமுத்தூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 441.8 மீ. உயரத்தில், (10°57′35″N 76°55′37″E / 10.9596°N 76.9269°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சுண்டக்காமுத்தூர் அமையப் பெற்றுள்ளது. போக்குவரத்துசாலைப் போக்குவரத்துகோயம்புத்தூரின் மதுக்கரையிலிருந்து மாதம்பட்டி செல்வதற்கான கோவை மேற்கு புறவழிச்சாலை, சுண்டக்காமுத்தூர் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.[3] மேலும் இவ்வூரில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.[4] சமயம்இந்துக் கோயில்செல்லாண்டியம்மன் கோயில் என்ற கிராமக் கோயில் ஒன்று சுண்டக்காமுத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.[5] இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6] அரசியல்சுண்டக்காமுத்தூர் பகுதியானது, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia