சுத்தியல்பிடிப்பான் (சுடுகலன்)![]() ![]() 3. துமுக்கி குழல் 4. இழைவோன் நிறுத்தி 5. இழைவோன் 6. வெடியூசி 7. சுத்தியல் 8. (சுத்தியல்) பிடிப்பான் 9. சுத்தியல்-சுருள்வில் 11. பின்னுதைப்புச் சுருள்வில் 12. விசை 13. சேமகம் சுடுகலனில், சுத்தியல்பிடிப்பான் (ஆங்கிலம்: sear) என்பது விசையின்மீது சரியான அளவில் அழுத்தம் தரும்வரை, சுத்தியல், அடிப்பான், அல்லது ஆணியை பிடித்துவைக்க, விசை இயக்கமுறையோடு இருக்கும் ஒரு பாகம்/கூறு ஆகும். இதிலிருந்து விடுவிக்கப்படும் சுத்தியலோ, அடிப்பானோ, அல்லது ஆணியோ தான் ஆயுதத்தை வெடிக்கச் செய்யும். ஒரு சுடுகலன் உற்பத்தியாளரின் குறிப்பின்படி:
ஒரு விசைத்திரளில், எத்தனை பிடிப்பான் வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக, ரூகர் ப்ளாக்ஹாக் ஓரியக்க சுழல்துப்பாக்கியில் சுத்தியலை விடுவிப்பதற்கு, ஒன்று தான் இருக்கும். ரூகர் ரெட்ஹாக் ஓர்/ஈரியக்க சுழல்துப்பாக்கியில் இரண்டு பிடிப்பான்கள் இருக்கும் (ஓரியக்க விடுவிப்பிற்காக ஒன்றும், ஈரியக்க விடுவிப்பிற்காக மற்றொன்றும் இருக்கும்). பிரவுனிங் பி.எல்.ஆர் புரிதுமுக்கியில் மூன்று பிடிப்பாங்கள் இருக்கும். பல தெரிவுச்சூடு புரிதுமுக்கிகளில் இரண்டு பிடிப்பான்கள் இருக்கும், ஒன்று அரை-தானியக்க சுடுதலுக்காக, இரண்டாவது தானியக்க சுடுதலுக்காக. பல சுடுகலன்களில், துண்டிப்பியுடன் பிடிப்பான் இணைக்கப்பட்டிருக்கும். அரை-தானியக்க சுடும்சுழற்சி முடிவுற்றபிறகு, விசை விடுவிக்கப்பட்டு பிடிப்பான் தயாராகும் வரை, துண்டிப்பி தான் சுத்தியலை அதன் இடத்திலேயே வைக்கும். வெளி இணைப்புகள்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia