சுந்தரானந்தர்சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.(பிரசன்னா) கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.[1] வரலாறுஇவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. நூல்கள்
சுந்தரானந்தர் பாடல்இவரது பாடல்களில் ஒன்று எடுத்துக்காட்டு.[2] ஆதி ஆந்தம் மிக நிறைந்த சட்டைநாதர்க்கு
சோதி அந்தத்துள் இருக்கும் சுடரைப் போற்றிச்
நாதாந்த திருமூலர் பிண்ணாக்கு ஈசர்
மேதினியில் அன்புடனே வாதம் பார்த்தேன்
கருவிநூல்
மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia